கடந்த இரு தினங்களாக குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.82,000-க்கு கீழாகச் சென்றது சற்றே ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.10,270 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.82,160 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.11,204 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.89,632 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. எனினும், சவரன் விலை தற்போது ரூ.82,000-க்கு சற்று நெருக்கமாகவே உள்ளது. தற்போதைய விலை குறைவுப் போக்கு தொடருவது சந்தேகமே. சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று சற்றே குறைந்தது.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (18.9.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.10,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.81,760 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.11,149 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.89,192 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (18.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.141 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,41,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை இனி?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.03 என்ற அளவில் மீண்டும் வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. பங்குச் சந்தையிலும் கலவையான போக்கு நிலவுவதால், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை பெரிதாக சரிய வாய்ப்பு இல்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,220 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,760 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,149 (ரூ.88 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,192 (ரூ.440 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,220 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,760 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,149 (ரூ.88 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,192 (ரூ.440 குறைவு)
Edited by Induja Raghunathan