+

Gold Rate Chennai: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சவரன் விலை ரூ.82,000-க்கு நெருங்கியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக சற்றே குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சிறிதளவே உயர்ந்தாலும், இந்தப் போக்கு நீடிக்கலாம என்ற அச்சம் நிலவுகிறது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.10,220 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.81,760 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.11,149 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.89,192 ஆகவும் விற்பனை ஆனது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சவரன் விலை ரூ.82,000-க்கு நெருங்கியுள்ளது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று மீண்டும் கணிசமாக உயர்ந்தது.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (19.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.10,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.81,840 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.11,160 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.89,280 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (19.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.143 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,43,000 ஆகவும் விற்பனை ஆகிறது.


தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அந்த வகையில், தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.29 என்ற அளவில் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அத்துடன், பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது. எனவே, தங்கம் விலை உயர்வுப் போக்கு தொடரக்கூடும் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,230 (ரூ.10 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,840 (ரூ.80 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,160 (ரூ.11 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,289 (ரூ.88 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,230 (ரூ.10 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,840 (ரூ.80 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,160 (ரூ.11 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.89,289 (ரூ.88 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter