Gold Rate Chennai: ஷாக், ஷாக், ஷாக்... ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,120 உயர்வு!

11:21 AM Aug 02, 2025 | Jai s

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 குறைந்து ரூ.9,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 குறைந்து ரூ.73,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.21 குறைந்து ரூ.9,982 ஆகவும், சவரன் விலை ரூ.168 குறைந்து ரூ.79,856 ஆகவும் விற்பனை ஆனது.

இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பாதகச் சூழல்கள் காரணமாக தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. சவரன் விலை ரூ.74,000-ஐ கடந்துள்ளது. சுப காரியங்களுக்கு அவசியம் எனில் மட்டுமே நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (2.8.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.9,290 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.153 உயர்ந்து ரூ.10,135 ஆகவும், சவரன் விலை ரூ.1,224 உயர்ந்து ரூ.81,080 ஆகவும் விற்பனை ஆகிறது.


வெள்ளி விலை:

சென்னையில் இன்று (2.8.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.123 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,23,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவுக்கு 25% வரியை ட்ரம்ப் விதித்திருப்பது தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.

சர்வதேச அளவிலும் பொருளாதார பின்னடைவுகள் அதிகரிக்கத்த தொடங்கியிருக்கிறது. இதனால், பாதுகாப்பு காரணங்களால் தங்கம் மீதான முதலீடு கூடத் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் அதிகபட்சம் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,290 (ரூ.140 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,320 (ரூ.1,120 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,135 (ரூ.153 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,080 (ரூ.1,224 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,290 (ரூ.140 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,320 (ரூ.1,120 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,135 (ரூ.153 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,080 (ரூ.1,224 உயர்வு)


Edited by Induja Raghunathan