+

GST 2.0: குறைந்தது கார்களின் விலை - டாடா, ஹூண்டாய், மஹிந்திரா, டொயோட்டா கார்களின் புதிய விலை பட்டியல்!

மத்திய அரசின் ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பைத் தொடர்ந்து, மஹிந்திரா, டொயோட்டா உள்பட பல முன்னணி கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக, ஜிஎஸ்டி சீர்த்தங்களின் முழு பலனையும் வாடிக்கையாளர்களுக்கே வழங்குவதாகக் கூறி, தங்களது கார்களின் புதிய விலையை அறிவித்து வருகின்றன.

GST 2.0-ன் கீழ் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இம்மாதம் (செப்டம்பர்) 3ம் தேதி நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த ஜிஎஸ்டி 2.0 தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.

வரும் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய ஜிஎஸ்டியின் மூலம், புதிதாக கார் வாங்குபவர்களுக்கு கட்டணத்தில் அதிக சலுகைகள் கிடைக்க உள்ளன. இது கார் வாங்கும் கனவில் இருந்த பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.

முன்பு, 1200சிசி வரை எஞ்சின் கொண்ட சிறிய கார்கள், 4 மீட்டர் நீளத்திற்கு குறைவான பெட்ரோல் அல்லது CNG கார்கள் போன்றவற்றிற்கு 28% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் Mahindra, Toyota, Renault போன்ற முன்னணி நிறுவனங்களின் கார்கள் அதிரடியாக விலை குறைப்பை அறிவித்துள்ளன. குறிப்பாக, Maruti Alto K10, Swift, Hyundai i20, Tata Tiago, Renault Kwid போன்ற கார்களின் விலைகள் மலிவாகின்றன. மேலும், 1500-சிசிவரை டீசல் கார்கள் கூட 18% ஜிஎஸ்டி மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியதோடு ஒப்பிடுகையில், பெரிய கார்கள் மீதான வரி சற்று அதிகம்தான். ஆனாலும், அது பழைய விலையை ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக Maruti Brezza, XL6, Hyundai Creta, Honda City போன்ற பெரிய பெட்ரோல் கார்கள் மீது முன்பு 45% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது 40%ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், Tata Harrier, Safari, Mahindra Scorpio-N, XUV700 போன்ற பெரிய டீசல் கார்களும் 48%க்கு பதிலாக இப்போது 40% ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல முன்னணி கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக, ஜிஎஸ்டி சீர்த்தங்களின்படி, தங்களது கார்களின் புதிய விலையை அறிவித்து வருகின்றன.

gst 2.0

மஹிந்திரா & மஹிந்திரா கார்களின் விலை

ஜிஎஸ்டி 2.0 அறிவிப்புகளைத் தொடர்ந்து, முன்னணி விளையாட்டு பயன்பாட்டு வாகனத் (எஸ்யூவி) தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா (M & M), அதன் முழு ஐசிஇ எஸ்யூவி (ICE SUV) போர்ட்ஃபோலியோவின், முழு ஜிஎஸ்டி நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, மஹிந்திரா எஸ்யூவிகளின் விலை ரூ.1.01 லட்சம் (தார் 4WD) மற்றும் ரூ.1.56 லட்சம் (XUV 3XO டீசல்) வரை குறையும். செப்டம்பர் 6 முதல் ICE போர்ட்ஃபோலியோக்களில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கும்.

பின்வருமாறு சம்பந்தப்பட்ட கார்களின் விலை குறைய உள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. அதன்படி, முறையே அதன் பழைய விலை, புதிய விலை மற்றும் ஜிஎஸ்டி 2.0வால் குறையவுள்ள விலை போன்றவற்றின் விபரம்:

AX (O) Hard Top -

  • பழைய விலை -ரூ. 11,50,001
  • புதிய விலை - ரூ. 10,31,701
  • வித்தியாசம் -ரூ. 1,18,300

LX Hard Top

  • பழைய விலை - ரூ. 13,16,000
  • புதிய விலை - ரூ. 11,80,600
  • வித்தியாசம் -ரூ. 1,35,400

LX 4WD Hard Top

  • பழைய விலை - ரூ. 16,12,000
  • புதிய விலை - ரூ. 15,25,100
  • வித்தியாசம் -ரூ. 86,900

Mahindra XUV 3XO

  • பழைய விலை ரூ. 9,66,303
  • புதிய விலை ரூ 8,22,303 -
  • வித்தியாசம் - ரூ.1.40 லட்சம்

Mahindra bolero

  • பழைய விலை - ரூ. 11,81,971
  • புதிய விலை - ரூ 10,60,000
  • வித்தியாசம் - ரூ.1.22 லட்சம்

Scorpio classic

  • பழைய விலை - ரூ. 17,50,085
  • புதிய விலை - ரூ. 16,49,065
  • வித்தியாசம் - ரூ.1.01 லட்சம்

XUV700

  • பழைய விலை - ரூ.14.49 - 25.14 லட்சம்
  • புதிய விலை - ரூ. 13 - 23.70 லட்சம்
  • வித்தியாசம்- ரூ.1.43 லட்சம்

mahindra-xuv-700

டொயோட்டா கார்களின் விலை

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனமும், சமீபத்திய GST விகிதக் குறைப்பின் பலன்களை முழுமையாக தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக TKMன் விற்பனை-சேவை-பயன்படுத்தப்பட்ட கார் வணிகம் மற்றும் லாப மேம்பாட்டிற்கான துணைத் தலைவர் வரீந்தர் வாத்வா கூறுகையில்,  

"பண்டிகை காலத்திற்கு முன்னதாக, எங்களது இந்த நடவடிக்கை சந்தையில் தேவையை மேலும் அதிகரிப்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முறையே அதன் பழைய விலை, புதிய விலை மற்றும் ஜிஎஸ்டி 2.0வால் குறையவுள்ள விலை போன்றவற்றின் விபரம்:

Hyryder

  • பழைய விலை - ரூ.14,03,949
  • புதிய விலை - ரூ. 13,40,000
  • வித்தியாசம் - *ரூ.65,400

Innova Crysta 2.4 GX 8Str

  • பழைய விலை - ரூ. 19,99,000
  • புதிய விலை - 18,10,000
  • வித்தியாசம் - ரூ.1,80,600

Toyota Innova Hycross

  • பழைய விலை - ரூ. 24.95 - 41.26 Lakh
  • புதிய விலை – ரூ. 23.85 – 40.11 லட்சம்
  • ஹைக்ராஸ் ரூ.115,800

Fortuner

  • பழைய விலை - ரூ. 45.60 - 65.93 லட்சம்
  • புதிய விலை – ரூ. 42.10 – 62.43 லட்சம்
  • வித்தியாசம் - ரூ.349,000

Toyota car

ஹூண்டாய் மாடல்களின் புதிய விலை

ஹூண்டாய் நிறுவனமும் இந்த ஜிஎஸ்டி 2.0ன் முழுப் பலனையும் தங்களது வாடிக்கையாளர்களுக்கே வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஹூண்டாய் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் கூறுகையில்,

“இந்த சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை அதிகரிப்பதோடு, ஆட்டோமொபைல் துறைக்கும் புதிய வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முறையே அதன் பழைய விலை, புதிய விலை மற்றும் ஜிஎஸ்டி 2.0வால் குறையவுள்ள விலை போன்றவற்றின் விபரம்:

Verna

  • பழைய விலை -ரூ. 13.83 லட்சம்
  • புதிய விலை – ரூ. 13.23 லட்சம்
  • வித்தியாசம் - ரூ.60,640

Creta

  • பழைய விலை - ரூ 13.79 லட்சம்
  • புதிய விலை – ரூ. 13 லட்சம்
  • வித்தியாசம் - ரூ.72,145

Alcazar

  • பழைய விலை - ரூ 18.63 லட்சம்
  • புதிய விலை – ரூ. 17.93 லட்சம்
  • வித்தியாசம் - ரூ.75,376

i20

  • பழைய விலை - ரூ. 8.97 லட்சம்
  • புதிய விலை – ரூ. 7.99 லட்சம்
  • வித்தியாசம் - ரூ.98,053

Venue

  • பழைய விலை -ரூ. 9.48 லட்சம்
  • புதிய விலை – ரூ. 8.25 லட்சம்
  • வித்தியாசம் - ரூ.1.23 லட்சம்

Tucson

  • பழைய விலை - ரூ. 37.00 லட்சம்
  • புதிய விலை – ரூ. 34.50 லட்சம்
  • வித்தியாசம் - ரூ.2.40 லட்சம்
hyundai venue

ரெனால்ட் கார்கள் புதிய விலை

ரெனால்ட் இந்தியா நிறுவனமும், அதன் முழு தயாரிப்பு போர்ட்ஃபோலியோவிலும் ஜிஎஸ்டி 2.0ன் பலன்களையும் முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விலை திருத்தமானது, நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று டெலிவரி செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் இந்த சலுகை பொருந்தும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் வாடிக்கையாளர்கள், தங்கள் ரெனால்ட் காரை புதிய விலையில் உடனடியாக முன்பதிவு செய்யத் தொடங்கலாம் எனவும் ரெனால்ட் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. .

இது குறித்து ரெனால்ட்டின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மாமில்லபல்லே கூறுகையில்,

“ஜிஎஸ்டி 2.0-ன் முழு பலனையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது எங்கள் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பு ஆகும். இது எங்கள் கார்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், பண்டிகைக் காலத்தில் தேவையை அதிகரிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எங்கள் நோக்கத்தில் இது ஒரு முன்னேற்றமாகும்," என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Kwid

  • பழைய விலை - ரூ. 5.59 லட்சம்
  • புதிய விலை – ரூ. 5.04 லட்சம்
  • வித்தியாசம் – ரூ. 55,000

Triber

  • பழைய விலை - ரூ. 7.51 லட்சம்
  • புதிய விலை – ரூ. 6.70 லட்சம்
  • வித்தியாசம் – ரூ. 78,000

Kiger

  • பழைய விலை - ரூ. 7.51 லட்சம்
  • புதிய விலை – ரூ. 6.50 லட்சம்
  • வித்தியாசம் – ரூ. 96,000
Renault

ஜாகுவார் கார்கள் விலை

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் விற்பனை செய்யக்கூடிய கார்களின் விலை 4.5 லட்சம் ரூபாய் முதல் 30.4 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று முதலே அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரேஞ்ச் ரோவர், டிஸ்கவரி, டிஃபெண்டர் போன்ற பல்வேறு மாடல் கார்களின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.

இது தொடர்பாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்தியாவிற்கான மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஆடம்பர வாகனங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது கார் விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்கும். இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கான சந்தை மற்றும் விற்பனை இதன் மூலம் பெருகும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Discovery – Metropolitan Edition

  • பழைய விலை - ரூ. 1.75 கோடி
  • புதிய விலை – ரூ. 1.70 கோடி
  • வித்தியாசம் – ரூ.5 லட்சம்

Defender – Octa Edition One (V8)

  • பழைய விலை - ரூ. 2.70 Cr – 2.98 கோடி
  • புதிய விலை – ரூ. 2.59 Cr – 2.79  கோடி
  • வித்தியாசம் – ரூ. ₹11–19  லட்சம்
land rover car

டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல், தங்களது கார்கள் மற்றும் எஸ்யூவிகள் மீதான சமீபத்திய ஜிஎஸ்டி குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக டாடா மோட்டார்ஸும் அறிவித்துள்ளது.

Tiago

  • பழைய விலை - Rs. 6 லட்சம்
  • புதிய விலை – ரூ. 5.25 லட்சம்
  • வித்தியாசம் – ரூ.75,000

Nexon

  • பழைய விலை - ரூ. 9.5 லட்சம்
  • புதிய விலை – ரூ. 8 லட்சம்
  • வித்தியாசம் – ரூ.1,55,000

மேற்கூறிய நிறுவனங்கள் மட்டுமின்றி, BMW மற்றும் Mercedes Benz போன்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பைத் தொடர்ந்து, தங்களது அதிரடி விலை குறைப்புகளை அறிவித்துள்ளன. அதன்படி,

BMW X7

  • பழைய விலை - ரூ. 1.66 கோடி
  • புதிய விலை – ரூ. 1.57 கோடி
  • வித்தியாசம் – ரூ.9 லட்சம்

அதன் பிரபலமான X1 SUV காரின் விலை ரூ.1.80 லட்சம் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tata cars

காத்திருக்கும் மக்கள்

கடந்த மாதம் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, வாகன விலைகள் 8-10% வரை குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். இதனால், கார்கள் வாங்குவதை பலர் தள்ளிப் போடத் தொடங்கினர். இதன் தாக்கத்தால், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆட்டோமொபைல் விற்பனையில் பாதிப்பைச் சந்தித்தது.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலச் சலுகைகளுக்காகவும் மக்கள் காத்திருப்பார்கள். இந்த ஆண்டு அதோடு ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்களும் சேர்ந்து கொள்ள, கார் வாங்கும் திட்டத்தை மக்கள் தள்ளி வைத்து வந்தனர்.

அவர்களது காத்திருப்பின் பலனாக, தற்போது மத்திய அரசும் ஜிஎஸ்டி 2.0வில் பல அதிரடிகளை அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, முன்னணி கார் நிறுவனங்களும் இந்த ஜிஎஸ்டி சீர்திருத்த பலனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கே வழங்குவதாக அறிவித்து வருவது, கார் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தகவல் உதவி: கார் தேகோ

facebook twitter