+

பழனி அருகே வறண்ட நிலத்தை மூன்றே ஆண்டுகளில் அழகிய தென்னந்தோப்பாக மாற்றிய நடிகர் மாதவன்!

தமிழில் அலைபாயுதே தொடங்கி கமல்ஹாசனுடன் ஹிட் படமான அன்பே சிவம் என்று பயணித்து தற்போது இந்தியில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘துரந்தர்’ படம் வரை பல மொழிப் படங்களில் நடித்துப் பெயர் பெற்ற பிரபல நடிகர் மாதவன், வறண்டு போன நிலத்தை மூன்றே ஆண்டுகளில் பச்சைப்பசுமைத் தென்னந்தோப்பாக மாற்றியுள்ளார். த

தமிழில் 'அலைபாயுதே' தொடங்கி கமல்ஹாசனுடன் ஹிட் படமான 'அன்பே சிவம்' என்று பயணித்து தற்போது இந்தியில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘துரந்தர்’ படம் வரை பல மொழிப் படங்களில் நடித்துப் பெயர் பெற்ற பிரபல நடிகர் மாதவன், வறண்டு போன நிலத்தை மூன்றே ஆண்டுகளில் பச்சைப்பசுமைத் தென்னந்தோப்பாக மாற்றியுள்ளார்.

திரைப்பட நட்சத்திரமான மாதவன் அமைதியாக ஒரு பசுமைக் காப்பு முயற்சியில் ஈடுபட்டார். தமிழ்நாட்டின் பழனி பகுதியில் இருந்த ஒரு வறண்ட நிலத்தை, மூன்று ஆண்டுகளில் பயனுள்ள தென்னந்தோப்பாக மாற்றியுள்ளார்.

2020-ஆம் ஆண்டு, மாதவன் தனது இந்த முயற்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

“தமிழ்நாட்டில் பழனியில் தேங்காய் வளர்ப்பு திட்டம் நிறைவடைந்தது. ஒரு முயற்சி, நிஜமாக மாறியது மிகுந்த திருப்தியை தருகிறது. இந்த நிலத்தின் புதிய உரிமையாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். பழனியில் இருந்து பிரிவது சற்று வருத்தமாக இருந்தாலும், இங்கு இருந்த அனுபவம் மறக்க முடியாதது,” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் நடிகர் மாதவன்.
Actor Madhavan

பின்னர் அவர் இதை பற்றி கூறியதாவது,

“இது ஒரு அருமையான திட்டம். வெறிச்சோடிய நிலத்தில் மிகவும் இனிமையான மற்றும் மணம் நிறைந்த non-hybrid, pure dwarf வகை தேங்காய்களை வளர்த்தோம். இதைப் பற்றிய கட்டுரை மற்றும் ஆய்வை விரைவில் விவசாயிகளுக்காக வெளியிட உள்ளேன்,” என்கிறார்.

“நிலம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்”

இந்த அனுபவம் பற்றி பேசும்போது, மாதவன் ஒவ்வொரு கட்டத்திலும் புதிதாக கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.

“நிலம் மீண்டும் உயிர்ப்பெற்று, அது இயல்பாக தர வேண்டிய விளைச்சலை கொடுக்கத் தொடங்கியது என்பது மிக அழகான அனுபவம். சரியான mulch பயன்படுத்துதல் முதல் கிணற்றில் சரியான மீன்களை விடுதல் வரை, ஒவ்வொரு படியும் எனக்கு ஒரு புதிய பாடமாக இருந்தது,” என்றார்.

அவர் மேலும் இதை வாழ்க்கையின் மிக திருப்திகரமான அனுபவமாக விவரித்தார்:

“இது எங்கள் வாழ்க்கையில் மிகுந்த திருப்தியும், மகிழ்ச்சியும் அளித்த அனுபவம். இந்த முயற்சியை இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் மீண்டும் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறுகிறார்.

விவசாயத்திற்கும் அப்பால்…”

2020 கொரோனா ஊரடங்கு காலத்தில், தனது மும்பை வீட்டின் terrace garden-ஐயும் மாதவன் பகிர்ந்தார். தனது மும்பை வீட்டிலும் மாடித்தோட்டம் அமைத்தும் பழங்கள், காய்கறிகளை விளைவிக்கிறார் மாதவன். அண்மையில் கூட, தன் மாடியில் வளர்ந்த cherry பழங்களை காட்டி பதிவிட்டார்.

Madhavan farms

’சமூக விழிப்புணர்வுக்கான குரல்’

விவசாயத்துடன் சேர்த்து, மாதவன் சமூக பிரச்சினைகளிலும் தனது குரலை கொடுத்து வருபவர்.

மாதவனின் இந்த முயற்சி, வெறும் விவசாயம் அல்ல — இயற்கையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி. ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், நிலத்தை உயிர்ப்பிக்க முயன்ற ஒரு மனிதராக அவர் எடுத்த இந்த பாதை, பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

facebook twitter