'அகில இந்திய வேலைவாய்ப்பு முகாம்' - ஐஐடி மெட்ராஸ் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கும் மிகப்பெரிய வாய்ப்பு!

12:07 PM Mar 28, 2025 | cyber simman

ஐஐடி மெட்ராஸ் முதல் முறையாக இந்தியா முழுவதும் உள்ள ஆய்வு மாணவர்களுக்காக வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. ஐஐடி மெட்ராஸில் 27 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் அகில இந்திய ஆய்வு மாணவர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த முகாம் நடைபெற்றது.

இரண்டாவது ஆண்டாக நடைபெறும் அகில இந்திய ஆய்வு மாணவர்கள் மாநாடு (AIRSS) தொழில்துறைக்குள் ஆய்வு கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஆய்வறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில் நிறுவன தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதுமையாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஆய்வு மாணவர்கள் மாநாடு, மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுகிறது. இதுவே நாட்டில் நடைபெறும் பெரிய மாநாடாக அமைகிறது.

27ம் தேதி முதல் நாள் நிகழ்வு, பெண் அதிகாரமளித்தல் தினத்தை மையமாகக் கொண்டது. இந்த நிகழ்வில் ஐஐடி மெட்ராஸ் பெண் மாணவர்களுக்கான Eaton நிறுவனத்தின் பிரதிபா விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது பெறுபவர்களுக்கு ரூ.125 லட்சம் நிதி அளிக்கப்படும்.

“2047ல் விக்ஸித் பாரத் இலக்கிற்கு, நவீன நோக்கிலான ஆய்வு முக்கியம். இதுவே மக்களுக்கான தொழில்நுட்ப தீர்வுகளை அளிக்கும். நம்முடைய துடிப்பான ஆய்வு சமூகம் இடையே கூட்டு முயற்சிகள் உண்டாக இந்த மாநாடு வழிவகுக்கும் என நம்புவதாக, ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி தெரிவித்தார்.

ஆய்வாளர்கள் தங்கள் எண்ணங்களை வர்த்தக நோக்கிலான பொருட்களாக மாற்றுவது எளிதாகி வருகிறது. இங்கு குவிந்திருக்கும் ஆய்வு மாணவர்களை ஐஐடி மெட்ராஸ் ஆய்வு பூங்கா மற்றும் இன்குபேஷன் மையத்தை பார்வையிட அழைக்கிறேன், என ஐஐடி மெட்ராஸ் டீன் சத்யநாராயணா கும்மாடி தெரிவித்தார்.

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு செயல் இயக்குனர் என்.சுப்பிரமணியன் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆய்வு டீன் சாந்தி பவன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Edited by Induja Raghunathan