+

ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: விலை குறையும் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற பயன்கள் என்ன?

செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்புகள், அத்தியாவசிய பொருட்கள் விலையில் 13% வரை குறைந்து வீட்டுக் குடும்ப செலவுகளைக் குறைத்து சேமிக்க உதவும். உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் அன்றாட தேவைகளில் 13% வரை சேமிப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறிய கார் வா

செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்புகள், அத்தியாவசிய பொருட்கள் விலையில் 13% வரை குறைந்து வீட்டுக் குடும்ப செலவுகளைக் குறைத்து சேமிக்க உதவும். உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் அன்றாட தேவைகளில் 13% வரை சேமிப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறிய கார் வாங்குபவர்கள் இப்போது ரூ.70,000 வரை மிச்சம் பிடிக்கலாம்.

புதிய இருவிகித ஜிஎஸ்டி முறை மளிகை மற்றும் தினசரி அத்தியாவசியப் பொருட்களின் பில்களை 13% குறைக்கும், அதே நேரத்தில், எழுதுபொருள், ஆடை மற்றும் காலணி வாங்குவது 7 முதல் 12% வரை சேமிப்பைக் கொடுக்கும்.

புதுப்பிக்கப்பட்ட இரு நிலை ஜிஎஸ்டி அமைப்பில், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 5% அல்லது 18% ஜிஎஸ்டி வரிக்குள் வரக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஸ்டேஷனரி, உடைகள், காலணிகள், மருந்துகள் ஆகியவற்றில் 7% முதல் 12% வரை விலை குறையும். மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவை ஜிஎஸ்டி விலக்கு பெறுவதால் 18% வரை நேரடி சேமிப்பு கிடைக்கும்.

மளிகைப் பொருட்கள், வேளாண் உபகரணங்கள், ஆடைகள், மருந்துகள், வாகனங்கள் உட்பட மொத்தம் 375 வகை பொருட்கள் விலை குறைவடைந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இதனை ‘ஜிஎஸ்டி சலுகை உற்சவம் (GST Bachat Utsav)’ என அழைத்துள்ளார்.

இது வரை 5%, 12%, 18%, 28% என்ற நான்கு நிலை ஜிஎஸ்டி அமைப்பு நிலவியது. புதிய அமைப்பில் 12% வகையில் இருந்த 99% பொருட்கள் 5% வகைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 28% வரிக்குட்பட்ட 90% பொருட்கள் 18% வரிக்குள் மாற்றப்பட்டுள்ளன.

GST car rates

புதிய ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதன் மூலம், மொத்தமாக ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை மக்கள் சேமிக்க முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

"இது ஏழை மக்களுக்கு, புதிய நடுத்தர வர்க்கத்துக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் இரட்டை சலுகையாக அமையும்," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி. 2.0 வினால் கிடைக்கும் சேமிப்புகள்:

  • குடும்ப மளிகை செலவுகள்: 13% சேமிப்பு

  • ஸ்டேஷனரி, உடைகள், காலணிகள்: 7% - 12% சேமிப்பு

  • மருத்துவ, ஆயுள் காப்பீடுகள்: 18% சேமிப்பு

  • சிறிய கார்கள்: ரூ.70,000 வரை சேமிப்பு

  • டிராக்டர்கள் (1800 cc வரை): ரூ.40,000 வரை சேமிப்பு

  • பைக், ஸ்கூட்டர்கள் (350 cc வரை): ரூ.8,000 சேமிப்பு

  • 32 இஞ்ச்சுக்கு மேற்பட்ட டிவிக்கள்: ரூ.3,500 சேமிப்பு

  • ஏ.சி: ரூ.2,800 சேமிப்பு (ஜிஎஸ்டி 28% லிருந்து 18%க்கு குறைப்பு).

புதிய ஜிஎஸ்டி :

5% மற்றும் 18% – பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள்

40% – அதிக விலையுள்ள ஆடம்பரப் பொருட்கள்

28% + செஸ்வரி – புகையிலை மற்றும் பிற இதே வகைப் பொருட்கள்.

facebook twitter