
2025 மற்றும் 2026 நிதியாண்டில் இந்தியா 6.4% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் நாட்டின் நிலையான வளர்ச்சி, வலுவான நுகர்வு வளர்ச்சியை ஆதரிக்கும் சீர்திருத்த உந்துதல் மற்றும் பொது முதலீட்டிற்கான சாதகச் சூழல் ஆகியவையே இதற்குக் காரணம் என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று ஐ.எம்.எஃப். வெளியிட்ட உலக பொருளாதார கணிப்பாய்வில் கூறியிருப்பதாவது,
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இந்த சதவீதங்கள் மேல்நோக்கி திருத்தப்பட்டுள்ளன, இது ஏப்ரல் கணிப்பில் கருதப்பட்டதை விட "சாதகமான சூழலை" பிரதிபலிக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, தரவுகளும் கணிப்புகளும் நிதியாண்டு (FY) அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் வளர்ச்சி கணிப்புகள் 2025 ஆம் ஆண்டிற்கு 6.7% ஆகவும், காலண்டர் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டிற்கு 6.4% ஆகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா குறித்த கேள்விக்கு பதிலளித்த IMF ஆராய்ச்சித் துறைத் தலைவர் டெனிஸ் ஐகன், செய்தியாளர் சந்திப்பின் போது,
"நாங்கள் உண்மையில் நாட்டிற்கு மிகவும் நிலையான வளர்ச்சியைக் கொண்டுள்ளோம்," என்று கூறினார்.

2024 ஆம் ஆண்டில் 6.5% வளர்ச்சியடைந்த இந்தியா, 2026 ஆம் ஆண்டைப் போலவே 2025 ஆம் ஆண்டிலும் 6.4% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
"இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டிற்கான 6.4% வளர்ச்சி விகிதங்கள் ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட 2025ல் 0.2 சதவீத புள்ளிகள் மற்றும் 2026ல் 0.1 சதவீத புள்ளி ஆகியவற்றிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளன.
"வலுவான நுகர்வு வளர்ச்சியையும் பொது முதலீட்டிற்கான உந்துதலையும் ஆதரிக்கும் சீர்திருத்தங்களே இதற்குக் காரணம். இந்த உத்வேகத்தையும், நாம் கண்ட சமீபத்திய நல்ல வளர்ச்சி செயல்திறனையும் தொடர வேண்டும்,” என்றார் ஐகன்.
வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில், வளர்ச்சி 2025ல் 4.1% ஆகவும், 2026ல் 4.0% ஆகவும் இருக்கும் என்று IMF தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்டதைப் போலன்றி, 2025 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 0.8 சதவீதப் புள்ளி அதிகரித்து 4.8% ஆக திருத்தப்பட்டுள்ளது. உலகளாவிய வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 3% ஆகவும், 2026 ஆம் ஆண்டில் 3.1% ஆகவும் இருக்கும் என்று IMF தெரிவித்துள்ளது.
வளர்ந்த பொருளாதாரங்களில் வளர்ச்சி 2025-ஆம் ஆண்டில் 1.5% ஆகவும், 2026 ஆம் ஆண்டில் 1.6% ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை விட குறைந்த மட்டங்களில் கட்டண விகிதங்கள் நிலைபெறுவதோடு, நிதி நிலைமைகள் தளர்வடைவதால், 2025 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 1.9% என்ற விகிதத்தில் விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.