முன்னணி மென்பொருள் சேவை நிறுவனம் Zoho, ஏஐ திறன் கொண்ட மேம்பட்ட ஜோஹோ ஸ்கேனர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி ஸ்கேன் செய்வதோடு நின்று விடாமல், ஏஐ திறன் கொண்டு ஆவணங்கள் நிர்வாகத்தை ஏஐ திறன் கொண்டு மேம்படுத்தும் வகையில் அமைவதாக, இது தொடர்பான ஜோஹோ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த புதிய வடிவிலான ஆப், தானாக ஆவணங்கள் நுணியை கண்டறிவது, உருவத்தின் தரத்தை மேம்படுத்துவது, பின்னணியில் உள்ள குறைகளை நீக்குவது, எழுத்துக்களை ஓசிஆர் நுட்பம் மூலம் துல்லியமாக கண்டறிவது ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் பல மொழிகளில் செயல்படும் திறன் கொண்டது.
மேலும், பயனாளிகள் ஏஐ திறன் கொண்டு ஆவணங்களை தானாக வகைப்படுத்தி, டேக் செய்து கொள்ளலாம். தமிழ், இந்தி உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி கொண்டுள்ளது. இது பிராந்திய மொழிகளில் ஆவணங்களை கையாள உதவும்.
ஜோஹோ நிறுவனத்தின் செயல்திறன் மேம்பாடு சேவைகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுவதோடு, மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் இடைமுகத்திடையேயும் சீராக செயல்படும். இதன் மூலம், பயனாளிகள் தங்கள் ஆவணங்களை எங்கிருந்தும் அணுகலாம்.
இந்த செயலிக்கான பயனர் இடைமுகமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சான்றிதழ், ஆவணங்கள், பில்கள், கார்டுகள், என பலவற்றை ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது. ஜோஹோ சிஆர்.எம், ஜோஹோ வெர்க்டிரைவ் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும்.
ஏஐ சார்ந்த தனியுரிமை நிறைந்த சேவைகளை அறிமுகம் செய்வதில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாட்டின் வெளிப்படாக இந்த ஸ்கேனர் சேவை அமைகிறது, என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் பயனர் நட்பான வடிவமைப்பு மற்றும் குறைந்த விலை ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Edited by Induja Raghunathan