+

நோய்த் தடுப்பை எளிதாக்கும் ‘Neubee’ டிஜிட்டல் நண்பன்: Neuberg Diagnostics அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி பரிசோதனை சேவை வழங்குநர்களில் ஒன்றான Neuberg Diagnostics, மக்களுக்கு முன்னெச்சரிக்கை சுகாதாரத்தை எளிமையாக புரிந்துகொள்ள உதவும் ‘Neubee’ என்ற புதிய டிஜிட்டல் சுகாதார துணையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகச் சுகாதார தினம், 2026-ஐ முன்னிட்டு அறிமுகமான இந்த முயற்சி, சுகாதார விழிப்புணர்வ

இந்தியாவின் முன்னணி பரிசோதனை சேவை வழங்குநர்களில் ஒன்றான Neuberg Diagnostics, மக்களுக்கு முன்னெச்சரிக்கை சுகாதாரத்தை எளிமையாக புரிந்துகொள்ள உதவும் ‘Neubee’ என்ற புதிய டிஜிட்டல் சுகாதார துணையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகச் சுகாதார தினம், 2026-ஐ முன்னிட்டு அறிமுகமான இந்த முயற்சி, சுகாதார விழிப்புணர்வை எளிமையாகவும் அனைவரும் அணுக முடியக்கூடியதாகவும் மாற்றுகிறது.

சுகாதாரத் துறையில் அணுகல் குறைவை விட புரிதல் குறைவே பெரிய சவாலாக உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு Neubee உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ சொற்கள் மற்றும் பரிசோதனை அறிக்கைகள் எல்லாவற்றிற்கும் மேலாக என்ன நோயாக இருக்குமோ என்ற பயமும் பலருக்கு சிக்கலாகத் தோன்றுவதால், முன்னெச்சரிக்கை பரிசோதனைகளை மக்கள் தவிர்க்கிறார்கள். இந்த இடைவெளியை நீக்கி, சிக்கலான சுகாதார தகவல்களை எளியமொழியில் விளக்குவது Neubee-ன் முக்கிய நோக்கமாகும்.

Neuberg

Neubee, பயனர்களுக்கு நட்பான மற்றும் நம்பிக்கையூட்டும் வழிகாட்டியாக செயல்பட்டு, உடல்நிலை, பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் சோதனை செய்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றை எளிதாக புரிந்துகொள்ள உதவும்.

“இன்றைய சுகாதாரத்தில் மிகப்பெரிய தடையாக இருப்பது அணுகல் அல்ல, புரிதல் தான். மருத்துவ தகவல்கள் சிக்கலாகவும் குழப்பமாகவும் உள்ளதால், குறிப்பாக இளம் தலைமுறையினர் அதை அணுகத் தயங்குகிறார்கள். மக்கள் தங்களது உடல்நிலையை தெளிவாக புரிந்துகொண்டால், அவர்கள் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. Neubee இந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி, சுகாதாரத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற உருவாக்கப்பட்டது,” என்று Neuberg Diagnostics நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜி மற்றும் ஆப்பரேஷன்ஸ் பிரசிடென்ட் கவ்யா தெரிவித்துள்ளார்.

Neubee, Neuberg நிறுவனத்தின் டிஜிட்டல் தளங்களில் குறும்பட விளக்கங்கள், கேள்வி-பதில்கள், ‘மித்ஸ் vs ஃபாக்ட்ஸ்’ தொடர்கள், சுகாதார வினாடி வினா போன்ற பல்வேறு வடிவங்களில் மக்களுடன் தொடர்பு கொள்ளும். HbA1c, வைட்டமின் D, கொழுப்பு போன்ற பரிசோதனை அளவுகோல்கள் குறித்து எளிய விளக்கங்களையும் வழங்கும்.

இந்த முயற்சி, பரிசோதனை சேவையை மட்டும் வழங்கும் அணுகுமுறையிலிருந்து விலகி, மக்களுடன் தொடர்ச்சியான மனிதநேய உறவை உருவாக்கும் நோக்கத்தையும் காட்டுகிறது. சுகாதாரத்தை எளிமையாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம், மக்கள் முன்னெச்சரிக்கை பராமரிப்பை விரைவாக மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.

சென்னை தலைமையகமாக கொண்ட Neuberg Diagnostics, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவில் சேவைகளை வழங்கி வருகிறது. CAP மற்றும் NABL அங்கீகரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுடன், ஆண்டுதோறும் 3 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செயல்படுத்தி வருகிறது. 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது சேவைகளை விரிவுபடுத்தி வரும் இந்த நிறுவனம், முன்னேற்றமான பரிசோதனை, ஜீனோமிக்ஸ் மற்றும் தனிப்பட்ட மருத்துவ சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

facebook twitter