+

Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் ‘ரெட்’ அலர்ட் - காரணம் என்ன?

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் மீண்டும் வளைகுடாவில் பதற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது.

இந்திய பங்குச் சந்தையில் இன்று மீண்டும் சரிவுப் போக்கு நிலவுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 2,946 புள்ளி​கள் உயர்ந்து வர்த்தக நேர முடி​வில் 77,562 புள்​ளி​களில் நிலைபெற்​றது. இந்த உயர்​வால், ஒரே நாளில் முதலீட்​டாளர்​களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.17 லட்​சம் கோடி அளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 243.57 புள்ளிகள் சரிந்து 77,319.33 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 88.3 புள்ளிகள் சரிந்து 23,909.05 ஆக இருந்தது.

“ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் மீண்டும் வளைகுடாவில் பதற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் என்டிபிசி, டிசிஎஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், நெஸ்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. இன்போசிஸ், பாரதி ஏர்டெல், எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், டைடன் கம்பெனி, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 474.79 புள்ளிகள் சரிந்து 77,088.11 ஆகவும், நிஃப்டி 100.40 புள்ளிகள் சரிந்து 23,896.95 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆனால், ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் என அனைத்திலும் சரிவு நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் மீண்டும் வளைகுடாவில் பதற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

என்டிபிசி

டிசிஎஸ்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

நெஸ்லே இந்தியா

டாடா மோட்டார்ஸ்

டாடா ஸ்டீல்

ஐடிசி

மாருதி சுசுகி

சன் பார்மா

பஜாஜ் ஃபின்சர்வ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இன்போசிஸ்

பாரதி ஏர்டெல்

எடர்னல்

பஜாஜ் ஃபைனான்ஸ்

டைடன் கம்பெனி

ஆக்சிஸ் பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அதானி போர்ட்ஸ்

எஸ்பிஐ

இண்டஸ்இண்ட் பேங்க்

எம் அண்ட் எம்

எல் அண்ட் டி

ஏசியன் பெயின்ட்ஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

ஐசிஐசிஐ பேங்க்

கோடக் மஹிந்திரா பேங்க்

டெக் மஹிந்திரா

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.73 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter