+

இனி ஒரே நாளில் பதிவு மற்றும் உடனடி பைக் டெலிவரி வசதி - ஓலா எலெட்ரிக் அறிமுகம்!

பெங்களூருவில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

வாகனம் பதிவு செய்யப்பட்ட அன்றே டெலிவரி செய்யும் முன்னோட்ட திட்டம் #HyperDelivery ஓலா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்துள்ளது. பெங்களூருவில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது ஓலா எலெக்ட்ரிக் மையத்தில் கார் வாங்கும் செயல்முறையை பூர்த்தி செய்த பிறகு, சில மணி நேரங்களில் வாகனத்தை பெறலாம். வாகன பதிவு செயல்முறையை நிறுவனத்திற்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் இது சாத்தியமாவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ola electric

ஓலா எலெக்ட்ரிக் வாகன பதிவை மேற்கொண்டு வந்த ரோஸ்மெட்டா டிஜிட்டல் சர்வீசஸ் மற்றும் ஷிம்மிட் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் பிப்ரவரி மாதம் நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தியது.

அதிகரிக்கும் நஷ்டத்திற்கு மத்தியில் நிறுவன செயல்பாடுகளை சீரமைக்கும் முயற்சியின் ஒரு அம்சமாக இது அமைந்தது. எனினும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நிறுவனத்தின் மின் வாகன தயாரிப்பு பிரிவு மீது ரோஸ்மெட்டார் திவால் மனு தாக்கல் செய்தது.

எனினும் தனது துணை நிறுவனம், ரோஸ்மேட்டாவுடனான நிலுவையை சுமூகமாக தீர்வு கண்டதாக மார்ச் 25ல் ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்தது.

புதிய #HyperDelivery, சேவை மூலம் ஓலா எலெக்ட்ரிக் வழக்கமான பதிவில் உள்ள இடைத்தரகரை நீக்கியுள்ளதோடு, பெரும்பாலான செயல்முறையில் ஏஐ நுட்பத்தை கொண்டு வந்துள்ளது.

"ஏஐ துணையுடன் தானியங்கிமயம் மற்றும் பதிவு செயல்முறையை நிறுவனத்திற்குள் மேற்கொள்வதன் மூலம் செயல்முறை நேரத்தை பெருமளவு குறைத்துள்ளோம். இந்த வசதி, வாகனம் வாங்கும் மற்றும் டெலிவரி பெறும் அனுபவத்தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. சிக்கலான செயல்முறை மற்றும் நீண்ட காத்திருத்தலை நீக்கி வாடிக்கையாளர்களுக்கு வாகனம் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம்,” என ஓலா எலெக்ட்ரிக் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் மின் வாகன விற்பனையில், பஜாஜ் ஆட்டோ மற்றும், டிவிஎஸ் ஆட்டோவைவிட ஓலா எலெக்ட்ரிக் பின் தங்கியதாக வாகன் இணையதள தகவல் தெரிவிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்ச்சில் ஓலா எலெக்ட்ரிக், 23,430 வாகனங்கள் பதிவு செய்துள்ளது. சந்தை பங்கு 18 சதவீதமாக குறைந்துள்ளது.

(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஷரத்தா சர்மா ஓலே எலெக்ட்ரிக் சுயேட்சை இயக்குனராக உள்ளார்.)

ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter