
ஓபன் ஏஐ நிறுவனம், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்டடி மோடு எனும் புதிய வசதியை சாட்ஜிபிடியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேள்வி பதில் இயந்திரத்தை தொடர்பு கொள்ளும் தன்மை கொண்ட கற்றல் பங்குதாரராக மாற்றும் இந்த வசதி கல்வி கற்பதில் ஏஐ நுட்பத்தின் முக்கிய வளர்ச்சியாக அமைகிறது.
“பதில்களை பெறுவதோடு அல்லாமல், மாணவர்கள் சாட்ஜிபிடியுடன் கற்றுக்கொள்ள ஸ்டடி மோடு உதவுகிறது. இது மாணவர்களுக்கு படிப்படியாக வழிகாட்டி, சிந்தனைக்குறிய கேள்விகளை கேட்டு, மாணவர்களின் இலக்குகள், திறன் அளவிற்கு ஏற்ப அமைகிறது. நிஜ உலக ஆசிரியர் போல இது இருக்கும்,” என்று ஓபன் ஏஐ கல்வி துணைத்தலைவர் லியா பெல்ஸ்கி லிங்க்டுஇன் பதிவில் கூறியுள்ளார்.

இந்த அறிமுகம் ஓபன் ஏஐ நிறுவனத்தை கல்விநுட்ப பரப்பில், இதே போன்ற அம்சங்களை அளிக்கும் ஆலன், பிசிக்ஸ்வாலா, வேதாந்து, லீட், இன்பினிடி லேர்ன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியில் ஈடுபடுகிறது. இந்நிறுவனங்கள் இணை கற்றல், தேர்வு தயாரிப்பு மற்றும் தனிப்பட்ட கற்றல் வசதியை அளிக்கிறது.
மேலும், ஓபன் ஏஐ இந்தியா மற்றும் அமெரிக்காவில் சாட்ஜிபிடி நுட்பத்தின் மீது கல்வி சாதனங்களை உருவாக்க, கல்வி நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஓபன் ஏஐ தனது ஏஐ சாட்பாட் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கற்றல் கருவியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. மாணவர்கள் வீட்டுப்பாடம், தேர்வு தயாரிப்பு உள்ளிடவற்றுக்கு பயன்படுத்துகின்றனர்.
மேலும், ஆழமான சிந்திக்கும் தன்மையை ஊக்குவித்து, அர்த்தமுள்ள கற்றலுக்கு உதவும் வகையில் மாணவர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளோடு இணைந்து செயல்பட்டு ஸ்டடி மோடு வசதியை உருவாக்கியுள்ளதாக பெல்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதன் செயல்திறனை அறிய ஐஐடி மற்றும் இதர போட்டித்தேர்வுகளில் சோதித்துப் பார்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வசதி 11 மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கற்றல் முதல் தேர்வு தயாரிப்பு வரை பல பயன்பாட்டிற்கு இந்திய மாணவர்கள் மத்தியில் சோதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டடி மோடு தொடர்பு கொள்ளத்தக்க பிராம்ட்கள் மூலம் துடிப்பான சிந்திக்கும் முறையை ஊக்குவிக்கிறது. நேரடி பதில் அளிப்பதற்கு மாறாக, கேள்விகள், துப்புகளை பயன்படுத்துகிறது. சிக்கலான தலைப்புகளை சின்ன துண்டுகளாக, தெளிவாக சுட்டிக்காட்டப்படும் பகுதிகளாக பிரித்து அளிக்கிறது. இதன் மூலம் தகவல்களை புரிந்து கொள்வது எளிதாகிறது. பாடங்கள் தனி பயனாளிகள் கற்றல் அளவிற்கு ஏற்ப அமைகின்றன. கடந்த கால உரையாடல் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.
கற்றதை நினைவில் கொள்ளும் வகையில், வினாடி வினா மற்றும் எதிர்வினை கேள்விகள் பயனாளிகளிடம் கேட்கப்படுகின்றன. பயனாளிகள் தங்கள் கற்றல் இலக்குகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
இலவசம், பிளஸ், புரோ மற்றும் டீம் பிளான் உறுப்பினர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
சாட்ஜிபிடியுடன் கற்றலை மேம்படுத்துவதற்கான முதல் படி இது, என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை மேலும் மேம்படுத்த ஆய்வு செய்து வருகிறது. சிக்கலான தலைப்புகளுக்கு தெளிவான படங்கள், இலக்கு நிர்ணயித்தல், உரையாடலில் முன்னேற்றம் அறிதல், மேலும் ஆழமான தனிப்பட்ட தன்மை ஆகிய அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா
Edited by Induja Raghunathan