+

பெங்களூருவில் ரோல்ஸ்-ராய்ஸ் புதிய உலகளாவிய திறன் மையம் தொடக்கம்!

ரோல்ஸ்-ராய்ஸ், இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, பெங்களூரில் புதிய உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre - GCC) திறந்துள்ளது. இது நாட்டிலேயே நிறுவனம் இயக்கும் மிகப்பெரிய மையமாகும். இந்த புதிய மையத்தில், ரோல்ஸ்-ராய்ஸின் உலகளாவிய டிஜிட்டல் திறன்கள், எண்டர்பிரைஸ் சேவைகள் குழு, ச

ரோல்ஸ்-ராய்ஸ், இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, பெங்களூரில் புதிய உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre - GCC) திறந்துள்ளது. இது நாட்டிலேயே நிறுவனம் இயக்கும் மிகப்பெரிய மையமாகும்.

இந்த புதிய மையத்தில், ரோல்ஸ்-ராய்ஸின் உலகளாவிய டிஜிட்டல் திறன்கள், எண்டர்பிரைஸ் சேவைகள் குழு, சிவில் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு பொறியியல் குழுவினர் பணியாற்றவுள்ளனர். இந்த மையம், நிறுவனத்தின் மிகப்பெரிய திறன் மையமாக உருவாகும் எனவும், அதன் சிவில், பாதுகாப்பு மற்றும் பவர் சிஸ்டம் துறைகளில் உலகளாவிய முக்கிய பங்களிப்புகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் விநியோகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ரோல்ஸ்-ராய்ஸ் தெரிவித்துள்ளது. இது இந்திய விற்பனையாளர்களை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.

90 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கும் ரோல்ஸ்-ராய்ஸில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில் 2,000 பேர் பொறியியலாளர்கள். இன்று இந்தியப் படைகளில் 1,400க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் இன்ஜின்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்த மையத்தை திறந்து வைத்த கர்நாடகா பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் எம்.பி.படேல்,

“பெங்களூரு, உலகின் சிறந்த மூன்று ஏரோஸ்பேஸ் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த மாநிலத்தில் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் முழுமையான மதிப்பு சங்கிலியை உள்ளடக்கிய நிறுவனங்கள் உள்ளன,” எனத் தெரிவித்தார்.
Rolls Royce

ரோல்ஸ்-ராய்ஸ் நிதிச் தலைமை அதிகாரி ஹெலன் மெக்கேப் இதுகுறித்து கூறியதாவது,

“ரோல்ஸ்-ராய்ஸின் உலகளாவிய முன்னேற்றப் பயணத்தில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. இந்த புதிய திறன் மற்றும் புதுமை மையம், இந்தியாவுக்கான எங்கள் உத்தரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, நாங்கள் எங்கள் தடங்களை விரிவுபடுத்தும் வேளையில், எதிர்காலத்துக்கு தயார் சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். எங்கள் குழுக்களுடனும், பார்ட்னர்களுடனும் இணைந்து புதிய தீர்வுகளை உருவாக்கி, இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதே எங்கள் இலக்கு. என்றார்.

நிறுவனம் தற்போது பல ஆண்டு மாறுபாட்டு (transformation) கட்டத்தில் உள்ளதாகவும், இந்தியாவில் தங்களது வணிக வளர்ச்சியையும் அதில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுவதாகவும் ரோல்ஸ்-ராய்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழில்: முத்துகுமார்

facebook twitter