+

ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்’களுக்கு வழிகாட்ட ஆலோசனை குழுவை உருவாக்கியது Startup Policy Forum

இந்த குழு முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோரை கொண்டிருக்கும். அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்களை கண்டறிந்து, கொள்கை வரைவுகள் தொடர்பான வழிகாட்டுதலை வழங்குவதில் குழு கவனம் செலுத்தும்..

ஸ்டார்ட் அப் கொள்கை மேடை (SPF) இந்தியாவில் ஆழ்நுட்ப கொள்கை சூழல் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக ஆழ்நுட்ப ஆலோசனை குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோரை கொண்டிருக்கும். அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்’களை கண்டறிந்து, கொள்கை வரைவுகள் தொடர்பான வழிகாட்டுதலை வழங்குவதில் குழு கவனம் செலுத்தும்.

பிரசாந்த பிரகாஷ் (அக்சல்), அஞ்சலில் பன்சல் (அவானா கேபிடல்), சதீஷ் அண்டரா (எண்டியா பாட்னர்ஸ்), பிரவன் பை (3ஒன்4கேபிடல்), விஷேஷ் ராஜாராம் (ஸ்பெஷல் இன்வெஸ்ட்) உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.

Startups

குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் வருமாறு: தருண் மேத்தா (ஏத்தர் எனர்ஜி), அனிருத் சர்மா (Digantara), சகுன் பாஷா (முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்), பன்னீர்செல்வம் மதனகோபால் (மின்னணு அமைச்சக ஸ்டாரட் அப் மையம்), மனிஷ் திவான் (BIRAC); தில்லை ராஜன் (ஐஐடி மெட்ராஸ்), ஷ்ரத்தா சர்மா (யுவர் ஸ்டோரி நிறுவனர்), தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் விபோரே சர்மா, அனந்தமாய் ராய்சவுத்ரி.

 “உலகின் ஆழ்நுட்ப வல்லரசாக உருவாக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. ஆழ்நுட்ப ஆலோசனை குழு மூலம் தேசிய முன்னேற்றத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய புதுமையாக்கத்திற்கு துணை நிற்க தனித்தன்மை வாய்ந்த வல்லுனர்களை ஒன்றாக கொண்டு வருகிறோம்,” என குழுவின் தலைவர் மற்றும் சி.இ.ஓ.ஸ்வேதா ராஜ்பால் கோகி கூறினார்.

100 ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டறிந்து ஆதரிப்பதற்காக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஸ்டார்ட் அப் மையம், ஸ்டார்ட் அப் இந்தியா- DPIIT மற்றும் ஐஐடி மெட்ராஸ் மேற்கொள்ளும் #100DesiDeepTech திட்டத்தை இக்குழு முன்னின்று நடத்தும்.

தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட் அப்கள், கொள்கை வகுப்பு தொடர்பான உள்ளீடுகளை வழங்குவதோடு, மேம்பட்ட உற்பத்தி, விண்வெளி மற்றும் பயோடெக் உள்ளிட்ட துறைகளில் உள்ள சட்ட விதிகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் கருத்துக்களை அளிக்கும்.

“இந்த ஸ்டார்ட் அப்’களுக்கு சரியான வழிகாட்டுதல், ஆதரவு அளித்து, இந்தியாவில் இருந்து அடுத்த தலைமுறை நிறுவனங்கள் அலை உருவாக்க வழி செய்வதே எங்கள் நோக்கம்,” என்றும் ராஜ்பால் கூறினார்,

மேலும், ஆழ் நுட்ப கொள்கை ஆய்வுக்கான மையம் (CDPR), உடன் இணைந்தும் குழு செயல்படும்.

ஐஐடி மெட்ராஸ் தேர்வு செய்ய உள்ள #100DesiDeepTechs தொகுப்பு, செமிகண்டக்டர், பாதுகாப்பு, பசுமை வாயு, விண்வெளி, ட்ரோன், ஆளில்லா விமானம், மேம்பட்ட உற்பத்தி, தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்ததாக இருக்கும். 

வரும் மாதங்களில், ஸ்டார்ட் அப் கொள்கை அமைப்பு, இந்த 100 ஸ்டார்ட் அப்களிடம் இருந்து கருத்துக்களை திரட்ட வட்டமேசைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கருத்துக்கள் இகிகாய் லாவால் தொகுக்கப்பட்டு DeepTech Baithak-ல் முன்வைக்கப்படும்.

இந்த ஸ்டார்ட் அப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட ஆகஸ்ட் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஸ்டார்ட் அப் கொள்கை மேடையானது, 50க்கும் மேற்பட்ட வேகமாக வளரும் ஸ்டார்ட் அப் நிறுவங்கள் இணைந்து உருவாக்கிய தொழில் அமைப்பாகும். நிது நுட்பம், ஏஐ, ஆழ் நுட்பம், உற்பத்தி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதன் அங்கத்தினராக உள்ளன. கிரிட், ஓயோ, கார்ஸ் 24, பிசிக்ஸ் வாலா, மொபிகிவிக், பார்த்பே, கார்தேகோ, ஸ்விக்கி, ஜிரோதா, ரேசர்பே, ட்ரீம்11 உள்ளிட்டவை இதில் அடங்கும்.


Edited by Induja Raghunathan

facebook twitter