
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன் கிழமையான இன்று (30-07-25)) ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து சற்று முன் புள்ளிகள் உயர்ந்து வருகின்றன. சென்செக்ஸ் சற்று முன் நிலவரப்படி, சுமார் 204 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது. நிப்டி குறியீடு 55 புள்ளிகள் அதிகமாகியுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 11:30 மணி நிலவரப்படி, 205 புள்ளிகள் உயர்ந்து 81,542.80 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி55 புள்ளிகள் உயர்ந்து 24,876.40 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 51 புள்ளிகள் உயர, நிப்டி ஐடி குறியீடு 69 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகின்ரன. பிஎஸ்இ ஸ்மால் கேப் 177 புள்ளிகள் அதிகரித்து 53,967.41 புள்ளியாக உள்ளது. செக்டார்களில் கச்சா எண்ணெய் எரிவாயு, ஆட்டோ, மற்றும் ரியால்டி துறை பங்குகள் பின்னடைவு கண்டன. எல்.அண்டி நிறுவனத்தின் வலுவான காலாண்டு லாபங்களால் அதன் பங்குகள் 4% உயர்ந்துள்ளன.
காரணம்:
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைப் பொறுத்து தேர்ந்தெடுத்த முறையில் பங்குகள் வாங்கப்படுவதால் சந்தை இன்று ஏற்றமும் இறக்கமுமாகத் தொடங்கி தற்போது உயர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
லார்சன் அண்ட் டூப்ரோ
வருன் பெவரேஜஸ்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
பேங்க் ஆஃப் இந்தியா
கேய்னிஸ் டெக்
டாரண்ட் பவர்
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
இன்ஃபோ எட்ஜ்
பிரமல் பார்மா
சோனா பிஎல்டபிள்யூ
பாரத் ஃபோர்ஜ்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.87.23ஆக உள்ளது.