+

Stock News: மீளும் பங்குச் சந்தை - சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏற்றம்!

மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு நீடித்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன், உள்ளூர் காரணிகளாலும் பங்குச் சந்தை மீண்டு வருகிறது.

உள்ளூர் காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 19) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 322.81 புள்ளிகள் உயர்ந்து 75,637.85 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 75.25 புள்ளிகள் உயர்ந்து 23,725.20 ஆக இருந்தது.

“மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு நீடித்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன், உள்ளூர் காரணிகளாலும் பங்குச் சந்தை மீண்டு வருகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் மஹிந்திரா பேங்க், அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், எடர்னல் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 10.10 மணியளவில் சென்செக்ஸ் 240.65 புள்ளிகள் உயர்ந்து 75,555.69 ஆகவும், நிஃப்டி 75.75 புள்ளிகள் உயர்ந்து 23,725.70 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் கலவையான போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு நீடித்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன், உள்ளூர் காரணிகளாலும் பங்குச் சந்தை மீண்டு வருகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

ஐடிசி

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

டாடா ஸ்டீல்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இந்துஸ்தான் யூனிலீவர்

பஜாஜ் ஃபைனான்ஸ்

டாடா மோட்டாரஸ்

மாருதி சுசுகி

ஏசியன் பெயின்ட்ஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

என்டிபிசி

ஆக்சிஸ் பேங்க்

எல் அண்ட் டி

எம் அண்ட் எம்

எஸ்பிஐ

டெக் மஹிந்திரா

நெஸ்லே இந்தியா

இன்போசிஸ்

சன் பார்மா

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டிசிஎஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

பாரதி ஏர்டெல்

பஜாஜ் ஃபின்சர்வ்

கோடக் மஹிந்திரா பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

டைடன் கம்பெனி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.39 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter