Stock News: இந்திய பங்குச் சந்தையில் நிதானப் போக்கு நீடிப்பு - காரணம் என்ன?

12:06 PM Jul 28, 2026 | Jai s

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் குறைந்ததன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையில் நிதானப் போக்கு நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 152.7 புள்ளிகள் உயர்ந்து 76,988.48 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 44.95 புள்ளிகள் உயர்ந்து 24,040.90 ஆக இருந்தது.

“ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதிப் பேச்சு நடப்பதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 87 டாலராக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் பெரிய மாற்றமின்றி நிதானமான போக்கு நிலவி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டிசிஎஸ், டெக் மஹிந்திரா, எடர்னல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. கோடக் மஹிந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 48.30 புள்ளிகள் உயர்ந்து 76,884.08 ஆகவும், நிஃப்டி 15.60 புள்ளிகள் உயர்ந்து 24,011.55 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் கலவையான போக்கு நிலவுகிறது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் கலவையான போக்குதான் நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதிப் பேச்சு நடப்பதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 87 டாலராக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவி நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

டிசிஎஸ்

டெக் மஹிந்திரா

எடர்னல்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

நெஸ்லே இந்தியா

இன்போசிஸ்

எம் அண்ட் எம்

ஏசியன் பெயின்ட்ஸ்

டைடன் கம்பெனி

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

அதானி போர்ட்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

சன் பார்மா

ஆக்சிஸ் பேங்க்

மாருதி சுசுகி

எல் அண்ட் டி

டாடா ஸ்டீல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

கோடக் மஹிந்திரா பேங்க்

பஜாஜ் ஃபைனான்ஸ்

ஐடிசி

பாரதி ஏர்டெல்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்

எஸ்பிஐ

ஐசிஐசிஐ பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்க்

டாடா மோட்டார்ஸ்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

என்டிபிசி

இந்துஸ்தான் யூனிலீவர்

ரூபாய் மதிப்பு:

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.75 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan