+

Stock News: போர் நிறுத்தம் எதிரொலி - சென்செக்ஸ் 2,800+ புள்ளிகள் எழுச்சி!

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடாவில் பதற்றம் தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி நிலவுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 2,775.73 புள்ளிகள் உயர்ந்து 77,392.31 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 815.2 புள்ளிகள் உயர்ந்து to 23,938.85 ஆக இருந்தது.

“ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடாவில் பதற்றம் தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி நிலவுகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், சன் ஃபார்மா, நெஸ்லே இந்தியா, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவை சந்தித்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் அனைத்தும் ஏற்றம் கண்டிருந்தன.

இன்று பிற்பகல் 1 மணியளவில் சென்செக்ஸ் 2,808.41 புள்ளிகள் உயர்ந்து 77,424.99 ஆகவும், நிஃப்டி 836.75 புள்ளிகள் உயர்ந்து 23,960.40 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் என அனைத்திலும் ஏற்றம் நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடாவில் பதற்றம் தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி நிலவுகிறது

ஏறுமுகம் காணும் பங்குகள்:

டிசிஎஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இன்போசிஸ்

பாரதி ஏர்டெல்

ஐடிசி

எடர்னல்

என்டிபிசி

பஜாஜ் ஃபைனான்ஸ்

டைடன் கம்பெனி

ஆக்சிஸ் பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா ஸ்டீல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அதானி போர்ட்ஸ்

எஸ்பிஐ

இண்டஸ்இண்ட் பேங்க்

எம் அண்ட் எம்

எல் அண்ட் டி

மாருதி சுசுகி

பஜாஜ் ஃபின்சர்வ்

ஏசியன் பெயின்ட்ஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

ஐசிஐசிஐ பேங்க்

கோடக் மஹிந்திரா பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

சன் பார்மா

நெஸ்லே இந்தியா

டெக் மஹிந்திரா

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.52 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter