
உணவு டெலிவரி சேவை நிறுவனம் ஸ்விக்கி, 2020-2021ம் வரி மதிப்பீடு ஆண்டிற்கு ரூ.7.59 கோடி வரி செலுத்துவதற்கான உத்தரவை புனே தொழில்முறை வரி அலுவலகத்திடம் இருந்து பெற்றுள்ளது.
தொழில்கள், வர்த்தகங்கள் உள்ளிட்டவை மீதான மகாராஷ்டிரா மாநில வரி சட்டம் 1975 தொடர்பாக, ஊழியர்கள் தொழில்முறை வரி பிடித்தம் விதிமீறல்கள் அடிப்படையில் இந்த உத்தரவு அனுப்ப பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தனது ஆவண பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிரான வலுவான வாதங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்படும் என்றும் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, நிறுவன நிதி நிலை மற்றும் செயல்பாடுகள் மீது பெரிய தாக்கம் செலுத்தாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 1ம் தேதி, 2021 ஏப்ரல் மற்றும் 2022 மார்ச் வரையான காலத்திற்கு கூடுதலாக ரூ.158 கோடி வரி செலுத்துவதற்கான உத்தரவை பெற்றதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. பெங்களூரு, வருமானவரி துணை கமிஷ்னர் இந்த உத்தரவை அனுப்பியிருந்தார்.
வருமான வரிச்சட்டம் 1961, 37வது பிரிவின் கீழ் அனுமதிக்கப்படாத வணிகர்களுக்கான ரத்து கட்டணம் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பாக இந்த உத்தரவு அமைந்திருந்தது. வரிக்கு செலுத்தப்படாத, திரும்பி செலுத்தப்பட வேண்டிய வருமான வரி மீதான வட்டியும் இதில் அடங்கும்.
"ஏப்ரல் 2021 முதல் 2022 மார்ச் வரையான காலத்திற்கு கூடுதலாக ரூ.1,58,25,80,987 வரி செலுத்தும் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிரான வலுவான வாதங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan