+

தமிழக அரசு நடத்தும் 3 நாள் மேக்கப் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி - விரிவான விபரங்கள் இதோ!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் சென்னையில், மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், மூன்று நாட்கள் மேக்கப் மாஸ்டர் பயிற்சி, அடுத்த மாதம் (செப்டம்பர் மாதம்) 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (EDII-TN) வளாகத்தில், தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

makeup

மூன்று நாள் மேக்கப் பயிற்சி

மக்களுக்குத் தங்களை அழகு படுத்திக் கொள்வதில் எப்போதுமே தனி ஆர்வம் உண்டு. அதிலும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் மற்றும் நடிப்பு உள்ளிட்ட தொழில் சார்ந்த விசயங்களுக்காக மேக்கப் செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆண், பெண் என்ற பேதமின்றி இருபாலரும் மேக்கப் செய்து கொள்ள விரும்புவதால், இந்தத் தொழிலில் நாளுக்கு நாள் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.

இதனால், அதிக வருமானம் தரும் தொழில்களில் ஒன்றாக அழகுத் தொழில் துறை வளர்ந்து வருகிறது. என்னதான் இயற்கையாக இதில் ஈடுபாடு இருந்தாலும், முறைப்படி இதனைக் கற்றுக் கொள்ளும் போது, கூடுதலான தொழில் அறிவு கிடைக்கிறது. அதனால்தான் புதிய வேலைவாய்ப்புகளையும், தொழில்முனைவோர்களையும் உருவாக்கும் முயற்சியாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் அழகுக்கலை பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்தவகையில்,

சென்னை கிண்டியில், வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை என மூன்று நாட்கள் மேக்கப் மாஸ்டர் பயிற்சியை நடத்த இருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மணப்பெண் அலங்காரம் தொடங்கி, பேஷன், சினிமா, ஹெச்.டி மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர்,எஸ் எப் எக்ஸ் வரை அனைத்தும்’ இந்த வகுப்பில் கற்றுத்தரப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Makeup

பயிற்சி விபரங்கள்

  • மேம்பட்ட அழகுக்கலை நுணுக்கங்கள்

  • கிளாஸ் ஸ்கின் மேக்கப்

  • திருமணம் மற்றும் வரவேற்பு மணப்பெண் அலங்காரம்

  • ஹெச்.டி, 3 டி, 4டி மேக்கப் நுட்பங்கள்

  • ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மேக்கப் கலைகள்

  • இயற்கை தோற்றம் தரும் மேக்கப்

  • தோல் உணர்திறன் சோதனை மற்றும் திருத்தம்

  • அதிக நுட்பமுள்ள கண் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலிங்

  • சேலை அணிவது குறித்த தொழில்நுட்ப பயிற்சி

  • தயாரிப்பாளர்கள் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர்கள் மேலாண்மை

  • வேலைவாய்ப்பு வழிகாட்டி

  • செய்முறைப் பயிற்சிகள்

பெண்களுக்கு மட்டும்

மேக்கப் ஆர்வலர்கள் மற்றும் அழகுத்துறையில் பணியாற்ற விரும்பும் பெண்கள் மட்டுமே இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவராக, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும்விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்

இந்தப் பயிற்சிகள் தொடர்பான கூடுதல் விபரங்களை பெற விரும்புவோர் www.ediitn.in என்ற வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 9543773337 மற்றும் 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சியின் முடிவில் அரசுச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

facebook twitter