
போட்டி மிகவும் தீவிரமான துறையில் மீண்டும் வருவது என்பது எளிதானது அல்ல. பல வழிகளில் இறைச்சி விற்பனை செய்த 'டெண்டர்கட்ஸ்' (TenderCuts) நிறுவனத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் வேகமான விரிவாக்கம் பாதகமாக அமைந்த கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்டு இப்போது ஆப்லைன் கடைகளை முதன்மையாகக் கொண்ட பிராண்டாக மாறி லாபத்தை தொடுவதை நோக்கி முன்னேறும் பயணமாக அமைந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் தற்போது நகரில் 18 கடைகளை கொண்டுள்ளது, ஆண்டு அடிப்படையில் ரூ.70 கோடி வாருவாயை பெற்றுள்ளது. இந்த பிராண்ட்; லாபத்தை நோக்கி பயணிக்கிறது. அனைத்து கடைகளிலும், நிகர வட்டி, வருமான வரி, தேய்மானத்திற்கு பிந்தைய லாபத்தை எட்டி உள்ளது. பிராண்ட் செயல்படும் சவாலான துறையில் இது அரிய நிகழ்வாக அமைகிறது.
டெண்டர்கட்ஸ் நிறுவனம் 2023ல் தில்லியைச் சார்ந்த குட் டு கோ நிறுவனத்தால் கையகப்படுத்தட்டது, இப்போது தாய் நிறுவனத்தை வளர்ச்சியில் மிஞ்சியுள்ளது.

டெண்டர்கட்ஸ் 1.0
2016ல் ‘டெண்டர்கட்ஸ்’ ஃப்ரெஷ் இறைச்சி விற்பனை செய்யும் நிறுவனமாக நிஷாந்த் சந்திரனால் துவங்கப்பட்டது. 90 நிமிடத்திற்குள் டெலிவரி எனும் உறுதி அளித்து, நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து, 2022ல் ஏப்ரலில் உச்சியைத் தொட்டு, சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரில் 75 கடைகளுக்கு மேல் விரிவாக்கம் செய்தது. 1600 பேர் கொண்ட குழுவோடு, ரூ.240 கோடி ஆண்டு அடிப்படையிலான வருவாய் கொண்டிருந்தது.
2017 செப்டம்பர் முதல் நிறுவனம், எட்டு சுற்றுகளில் மொத்தம் 38.1 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக டிராக்சன் தரவுகள் தெரிவிக்கின்றன. பாரகன் பாட்னர்ஸ், ஸ்டிரைடு வென்சர்ஸ் மற்றும் NABVENTURES ஆகிய முதன்மை முதலீட்டாளர்களை கொண்டிருந்தது.
“அவர்கள் விரிவாக்கத்தில் வேகமாக ஈடுபட்டனர். பெங்களூரு, ஐதராபாத்தில் நிறைய கடைகள் திறந்தனர். வருவாயை இரு மடங்காக்கினால் கூடுதல் நிதி அளிப்பதாக சில முதலீட்டாளர்கள் சொன்னதை அடுத்து சென்னையில் இருந்து நகரங்களுக்கு விரிவாக்கம் செய்தனர்,” என்கிறார் இணைந்த நிறுனத்தில் முதலீடு செய்துள்ள ஸ்டிரைடு வென்சர்ஸ் நிர்வாக பார்ட்னர் அபூர்வா சர்மா.
இருப்பினும், கோவிட் -19 பாதிப்பு, ஆன்லைன் சார்ந்த பிராண்ட்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக எண்ணி நிறுவனம் அகல கால் வைத்தது.
“பெருந்தொற்று காலத்தில் விற்பனைக்கு முன்னுரிமை அளித்தோம். அதன் பிறகு விற்பனை வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்கு பதிலாக ஒவ்வொரு பொருளுக்குமான லாபத்தை கணக்கிடுவதில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்,” என்று டெண்டர்கட்ஸ் இணை நிறுவனர் சசிகுமார் யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.
இருப்பினும், 2021ல் கிடைத்த சாதனை முதலீடு நிதி வரத்த்திற்கு பின், அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்படித்ததால் உண்டான நிதி குளிர்காலம் இறைச்சி சில்லறை விற்பனை வர்த்தகத்திற்கு பின்னடைவாக அமைந்தது.
“2022ல் நிதி சூழல் மிகவும் மந்தமானது. நிதி திரட்டுவது கடினமானது. திடிரென பார்த்தால் என்ன விலை கொடுத்தும் வளர்ச்சி அடைவது என்பது மதிப்பிழந்து, வருவாய் வளர்ச்சியைவிட லாபம் முக்கியமானது,” என்கிறார் சர்மா.
பிரத்யேக குளிர்சாதன வசதி, உறை உணவு விநியோகச் சங்கிலி, கையிருப்பு நிர்வாகம், மாநில எல்லைகளை கடந்ததும் ஏற்படும் விதிகள் சிக்கல் உள்ளிட்ட செயல்பாடு சார்ந்த சிக்கல்களையும், மூலதன பற்றாக்குறை வெளிப்படுத்தியது.
அதிக செயல்முறை செலவு மற்றும் குறைந்த லாப விகிதத்தை சமாளிக்க முடியாமல் டெண்டர்கட்ஸ் போட்டியாளரான சென்னையைச் சேர்ந்த Fipolo 2023ல் மூடப்பட்டது. மேலும் பல பிராந்திய சில்லறை இறைச்சி விற்பனை நிறுவனங்கள் மூடப்பட்டன அல்லது செயல்பாடுகள் குறைந்தன. இந்த துறையின் தீவிர முதலீடு தேவை மற்றும் குறைந்த லாப விகிதம் முதலீட்டாளர்களை பின்வாங்க வைத்தது.
லிசியஸ் மற்றும் பிரெஷ்டுஹோம் போன்ற நன்கறியப்பட்ட நிறுவனங்கள் கூட தொடர்ந்து அதிக நஷ்டத்தை எதிர்கொண்டன. இந்தத் துறையில் லாபம் காண்பது கடினம் எனும் எண்ணத்தை இது வலுவாக்கியது.
முன்னணி நிறுவனமான Licious 2024 நிதியாண்டில் ரூ.293.7 கோடி நஷ்டத்தை சந்திதத்து. அதற்கு முந்தைய ஆண்டு உண்டான ரூ.524 கோடி நஷ்டத்தை விட இது 44 சதவீதம் குறைவு. பிரெஷ்டுஹோம் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் 2023-24 ல் ரூ.149.73 கோடி நஷ்டம் கண்டதாக ஐஎன்சி24 தெரிவிக்கிறது.
மேலும், பொது பங்கு வெளியீட்டிற்கு தயாரான ’ஜேப்பிரெஷ்’ மும்பையின் ’போன்சரோ’ மற்றும் பெங்களூருவின் ’மிஸ்டர் மீட்’ ஆகிய நிறுவனங்களை இந்த காலத்தில் கையக்கப்படுத்தியது.
டெண்டர்கட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கம், வர்த்தகத்தின் சிக்கலானது தன்மை மற்றும் நிதி குளிர்காலம் ஆகியவை காரணமாக நிறுவனம் மூடப்பட்டு ’குட் டு கோ’ நிறுவனத்திடம் விற்கப்பட்டது. இரண்டு சகோதரர்களால் 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் தங்களது குடும்ப வர்த்தகத்தின் விநியோக சங்கிலி மற்றும் தொடர்புகளை கொண்டு, ஆன்லைன் டெலிவரி அமைப்பையும் உண்டாக்கியது.
“நாங்கள் அனைத்து விநியோக வழிகளிலும் செயல்படுவதாக சொல்லிக்கொண்டாலும், துவக்கம் முதல் சீரமைப்பு வரை ஆன்லைனை முதன்மையாக கருதினோம். அதுவே எங்கள் பலமாக இருந்தது. இந்த பிரிவு தான் வேகமாக வளரும் பிரிவு என்பதே எங்கள் பயணத்தின் மிகப்பெரிய பாடம்,” என்கிறார் சசிகுமார்.

டெண்டர்கட்ஸ் 2.0
புதிய நிறுவனம் கீழ், டெண்டர்கட்ஸ் செயல்பாடுகளை சீராக்க துவங்கியது. நிறுவனம் தனது ஆப்லைன் கடைகளை குறைந்த விலை அமைப்புகளாக மாற்றியது. மேம்பட்ட விற்பனை மாதிரியில் இருந்து சுற்றுப்புறம் சார்ந்த மாதிரிக்கு மாறியது. பெரிய குடியிருப்புகளுக்குள் கடைகளை அமைத்தது. பெரிய கடைகளில் இருந்து ஆயிரம் சதுர அடிக்கு குறைந்த இடத்திற்கு மாறியது.
சீரான விநியோக சங்கிலியை உண்டாக்கும் சசிகுமாரின் சீரமைப்பு முயற்சியால் டெண்டர்கட்ஸ் வளர்ந்திருந்தது. புதிய நிறுவனம் கீழ், ’குட் டு கோ’வின் செயல்முறை சிறப்பை சார்ந்திருந்தது. கொள்முதல், லாஜிஸ்டிக்ஸ் திட்டமிடல் மற்றும், வெண்டர் பேரம் போன்ற முக்கிய செயல்பாடுகள் மைய நோக்கில் மாறியது. இதன் காரணமாக தனி குழுக்கள் அல்லது நகல் குழுக்களில் செலவு செய்யும் தேவை இல்லாமல், செலவுகள் குறைந்தது. மேலும் குட் டு கோவின் ஆப்லைன் முதன்மை உத்திய கையாண்டது.
“குடு டு கோ எப்போதுமே லாபம் ஈட்டும் பிராண்டாக இருக்கிறது. ஆன்லைன் மட்டும் நம்புவதை விட, அதிக சில்லறை இருப்பு கொண்ட சிறிய கடைகள் சிறந்தவை என கருதியது. அதன் வருவாய் 80 சதவீதம் ஆப்லைன் மற்றும் 20 சதவீதம் ஆன்லைன் என அமைந்திருந்தது. ஒவ்வொரு பகுதியும், தனித்தன்மை கொண்டிருந்தாலும், ஆன்லைனை மட்டும் நம்பாமல் ஆப்லைன் முக்கியமானது என்பதை உணர்ந்திருந்தனர்,” என்கிறார் சர்மா.
டெண்டர்கட்ஸ்-க்கு மேலும் சீரமைப்பு தேவைப்பட்டது. உச்சத்தில் இருந்த போது 75 கடைகள் என்ற நிலை மாறி சென்னையைச் சுற்றிய பகுதிகளில் 13 கடைகள் என்றானது. பதப்படுத்தல் மையங்கள் சிறியதாக்கப்பட்டு, குழுக்களின் அளவும் குறைக்கப்பட்டன.
“மூலதன செலவுகளை குறைத்தோம். முன்னதாக வளர்ச்சியில் கவனம் செலுத்தினோம். இப்போது அதைவிட குறைந்த வளர்ச்சியில் லாபம் முக்கியமாகிறது. சீரான செயல்பாடு மற்றும் நுகர்வோர் அருகே கடைகள் எனும் மாதிரியே இப்போது நாங்கள் பின்பற்றும் மாதிரி,” என்கிறார் சசிகுமார்.
இந்த முயற்சி நல்ல பலன் அளித்துள்ளது. இதற்கு முன் ஒரு கடை லாபம் அடைய 15 முதல் 18 மாதங்கள் தேவைப்பட்ட நிலையில் தற்போது 6 முதல் 7 மாதங்களில் இது சாத்தியமாகிறது. சீரமைக்கப்பட்ட கடைகள், குறைந்த எண்ணிக்கை குழுக்கள், சுற்றுப்புற கவனம் காரணமாக ஒவ்வொரு கடையும் வேகமாக லாபகரமாயின. ஒட்டுமொத்த வர்த்தகத்தின் நஷ்டத்தின் தாக்கமும் குறைந்தது.
துறையின் தன்மைக்கு ஏற்ப நிறுவனம் தனது விநியோக அமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு செயலிலும் செயல்திறன், லாபத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
“முந்தைய மாதிரியில், விநியோகச் சங்கிலி செயல்திறனை உருவாக்கியிருந்தாலும், அது பிற்பகுதியில் தான் மெல்ல நிகழ்ந்தது. இந்த பயணத்தில் முதலில் இருந்து இதை செயல்படுத்தி வருகிறோம். குறைந்த காலத்தில் விநியோக செயல்திறன் சாத்தியமாகியுள்ளது,” என்கிறார் இணை நிறுவனர்.
ஆப்லைன் முதன்மை பிராண்டு என அழைக்கப்பட்டாலும், பெரும்பாலான விற்பனை ஆன்லைனில் இருந்து வருகிறது. கடையின் 4 கிமீ அளவில் ஆர்டர் செய்யலாம். டெலிவரி ஊழியர்கள் மற்றும் டி2சி இணையதளம் மூலம் இதற்கு வலு சேர்க்கிறது. சீரமைப்பின் போது 90 சதவீத விற்பனை ஆன்லைனில் நிகழ்ந்தது.
இந்த விகிதம் இப்போது குறைந்து 70 சதவீத வருவாய் ஆன்லைனில் வருகிறது. 30 சதவீதம் ஆப்லைனில் வருகிறது.
“காலப்போக்கில் இதை 50: 50 என அல்லது 60:40 என மாற்ற திட்டம், என்கிறார் சர்மா. டெண்டர்கட்ஸ் கடைகளை தேடி வருபவர்கள் அதிகம் உள்ளன,” என்றும் கூறுகிறார்.

“நுகர்வோர் தினசரி செல்லும் வழி அருகே இருந்தால் உள்ளூர் இறைச்சி கடையை விட எங்களை தேர்வு செய்கின்றனர் என்கிறார் சசிகுமார். ஆப்லைன் விற்பனை திட்டமிட்ட நீண்டகால வளர்ச்சி திட்டம்,” என்கிறார்.
நிறுவனம் தனது கடல்சார் உணவு வகைகளை இரட்டிப்பாக்க உள்ளது. பருவநிலை பிடிப்பு போன்ற சவால்கள் இதில் உள்ளன. போக்குவரத்து செலவு மற்றும் அதிக வகைகளும் சவாலானவை.
“தனிநபர் நுகர்வு என வரும் போது சிக்கனை விட, இறால் மற்றும் மீன்கள் தான் வேகமாக வளரும் பிரிவு. ஆனால், சுற்றுப்புற கடைகளில், மீன் கடைகளில் கூட அதிகம் மீன்களை பார்க்க முடியாது. இதற்கு வேறு திறன்கள் சார்ந்த செயல்முறை தேவை,” என்கிறார்.
250க்கும் மேலான எஸ்.கேயூக்கள் மூலம், பல வகை இறைச்சி தேர்வுகளை வழங்குகிறது. 2026 நிதியாண்டில் ரூ.100 கோடி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது.
அடுத்த 24 மாதங்களில் லாபத்தை தக்க வைத்தபடி சென்னையில் உள்ள கடைகளை இருமடங்காக்கி 50 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கால திட்டமிடல் தவிர, வளர்ச்சி மற்றும் லாபம் சரியாக இருந்தால் நிறுவனம் இறைச்சி துறையில் நுழைய விரும்பும் அல்லது வலுவாக விரும்பும் பாரம்பரிய உணவு சில்லறை விற்பனை நிறுவனத்தின் ஈர்ப்பு மிக்க கையகப்படுத்தல் இலக்காகவும் மாறலாம்.
ஆங்கிலத்தில்: அக்ஷிதா டோஷ்னிவால், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan