+

ஓலா, ஏதர் இடையிலான போட்டி மத்தியில், ஸ்டெடியான மாத மின்வாகன விற்பனை கண்ட TVS!

ஆகஸ்ட் மாதம் மின்சார வாகன (EV) சந்தையில் சிறிது சரிவு ஏற்பட்டிருந்தாலும், டிவிஎஸ் மோட்டார் தனது முதலிடத்தை நிலைநிறுத்தியது. iQube வாகனத்தை தயாரிக்கும் நிறுவனம், கடந்த மாதத்தில் மட்டும் 24,087 யூனிட்கள் விற்பனை செய்து 23.1% சந்தை பங்குடன் முன்னணியில் நீடிக்கிறது. இதனுடன், புதிய மாடலான TVS Orbiter-ஐ

ஆகஸ்ட் மாதம் மின்சார வாகன (EV) சந்தையில் சிறிது சரிவு ஏற்பட்டிருந்தாலும், டிவிஎஸ் மோட்டார் தனது முதலிடத்தை நிலைநிறுத்தியது. iQube வாகனத்தை தயாரிக்கும் நிறுவனம், கடந்த மாதத்தில் மட்டும் 24,087 யூனிட்கள் விற்பனை செய்து 23.1% சந்தை பங்குடன் முன்னணியில் நீடிக்கிறது.

இதனுடன், புதிய மாடலான TVS Orbiter-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.99,900 எனும் விலை நிர்ணயத்துடன், நகர்புற இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்த புதிய மாடல் சந்தையில் கோலோச்சவிருக்கிறது.

இதே நேரத்தில், சந்தையில் Ola Electric மற்றும் Ather Energy இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில் 17.1% சந்தை பங்கை வைத்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 18.1% ஆக உயர்ந்துள்ளது.

tvs electric scooters

அதே சமயம், Ather Energy 17,856 யூனிட்களை விற்பனை செய்து, 17.1% சந்தை பங்கை பிடித்துள்ளது. Rizta வாகனத்தின் வெற்றியுடன் Ather தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

மின்சார வாகனச் சந்தையில் கடந்த மாதத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த பஜாஜ் ஆட்டோ, ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்காத அரிய புவிகாந்தங்களின் (Rare Earth Magnets) பற்றாக்குறை காரணமாக, பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. வெறும் 11,730 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், சந்தை பங்கு 19.6% இருந்து 11.2% ஆக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் ‘ஜீரோ’-வாகக் கூட இருக்கலாம் என்று பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் தி இகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

EV உற்பத்தியில் முக்கியமான பகுதியாக உள்ள Rare Earth Magnet பற்றாக்குறை பெரும்பாலான நிறுவனங்களுக்கு பெரிய தடையாக இருக்கிறது. TVS, Bajaj, Ather உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்த சிக்கலை ஏற்கனவே வெளிப்படையாக கூறியுள்ளன.

ஆதர் CTO ஸ்வப்னில் ஜெயின், ஆகஸ்ட் 30 அன்று நடந்த Ather Community Day-யில், “Heavy Rare Earth Magnet”ஐவிட, “Rare Earth Magnet” மாறுதல் மூலம், தற்போதைய சிக்கலை ஒரு அளவு தாண்டிவிட்டோம் என்றார்.

மாறாக, Ola Electric இந்த பிரச்சனையை சீராக சமாளித்து வருகிறது. CEO பவிஷ் அகர்வால்,

"நாங்கள் தயாரித்து வரும் Ferrite Magnet இயங்கும் புதிய மோட்டார் மற்றும் மாற்றுப் பொருள் வழங்குநர்களுடன் சேர்ந்தது ஆகிய இரட்டை வணிக யுக்திகளால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது,” என நம்பிக்கை தெரிவித்தார்.

டிவிஎஸ் நிறுவனம், வரும் பண்டிகைக்காலங்களில் இந்த ரேர் எர்த் மேக்னெட் பற்றாக்குறை மின் வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது. இன்னும் பல நிறுவனங்கள் தற்போது மாற்று பொருட்கள் மற்றும் புதுத் தொழில்நுட்பங்களை தேடி வருகின்றன.

facebook twitter