+

தலைவர்கள் Vs பின்தொடர்வோர் - வேறுபடுத்தும் 10 தலைமைப் பண்புகள்!

தலைமைப் பண்பு என்பது ஒரு பெரிய பாய்ச்சல் அல்ல. அது காலப்போக்கில் கைக்கூடி வரும் தொடர்ச்சியான முடிவுகளின் தொகுப்பாகும். தலைவர்களையும் அவரை பின்தொடர்பவர்களையும் வேறுபடுத்தும் மிக முக்கியமான 10 விஷயங்களை இங்கே...

இரண்டு பேர் ஒரே நாளில், ஒரே பதவியில், ஒரே நிறுவனத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவர் ஒரு குழுவை வழிநடத்தி தலைமை தாங்குகிறார். மற்றவரோ இன்னும் அறிவுறுத்தல்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களுக்குள் என்ன நடந்தது? ஒரே வித்தியாசம், அவர்கள் மேற்கொண்ட அன்றாட தெரிவுகள். அவர்கள் தவறுகளுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள், வளர்ச்சியை கண்டார்களா? தங்கள் அணிக்கு தன்னை விட முன்னுரிமை கொடுக்கத் துணிந்தார்களா?

தலைமைப் பண்பு என்பது ஒரு பெரிய பாய்ச்சல் அல்ல. அது காலப்போக்கில் கைக்கூடி வரும் தொடர்ச்சியான முடிவுகளின் தொகுப்பாகும். தலைவர்களையும் அவரை பின்தொடர்பவர்களையும் வேறுபடுத்தும் மிக முக்கியமான 10 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

leadership

1. தூண்டுதலை விட உத்தியைத் தேர்ந்தெடுத்தல்

பின்தொடர்பவர்கள் பெரும்பாலும் சூழ்நிலைகள் வரும்போது எதிர்வினையாற்றுகிறார்கள். ஆனால், தலைவர்களோ கூர்ந்து கவனித்து, நீண்ட கால தாக்கத்தை மதிப்பிட்டு, அதன் பின்னர் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் உடனடி தீர்வு அவசியமில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சில நேரங்களில், புத்திசாலித்தனமான நடவடிக்கை என்பது பொறுமை, திட்டமிடல் மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவையே ஆகும்.

2. தவறுகளுக்கு பொறுப்பேற்றல்

தவறுகளை ஒப்புக்கொள்வது சங்கடமானதுதான். ஆனால், தலைவர்கள் அதில் முன்னால் நிற்கிறார்கள். அடுத்தவரை கைகாட்டுவதற்கு பதிலாக அதற்கு தானே பொறுப்பேற்பதன் மூலம், அவர்கள் நம்பகத்தன்மையை உருவாக்குகிறார்கள். பின்தொடர்பவர்கள் தவறுகளை மறைக்கிறார்கள்; தலைவர்கள் அவற்றை பாடங்களாக மாற்றுகிறார்கள்.

3. கூர்ந்து கவனிக்கும் பண்பு

யார் வேண்டுமானாலும் பிறரின் வார்த்தைகளைக் கேட்கலாம். ஆனால், அவர்கள் அனைவரும் உண்மையிலேயே புரிந்துகொள்வதற்காக கேட்பதில்லை. ஆனால், தலைவர்கள் தங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, சொல்லப்படுவதை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

இது பிறரின் நம்பிக்கையைப் பெற உதவுகிறது. சொல்பவரை மதிப்புமிக்கவராக உணர வைக்கிறது. இது பின்தொடர்பவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாத ஒரு குணம்.

4. அணிக்கு முன்னுரிமை கொடுத்தல்

பின்தொடர்பவர்கள், “இது எனக்கு எவ்வாறு பயனளிக்கிறது?” என்பதில் கவனம் செலுத்துவர். ஆனால் தலைவர்களோ, “இது அணியை எவ்வாறு உயர்த்தும்?” என்று கேட்பர்.

தலைமைத்துவம் என்பது கவனத்தை ஈர்க்கும் தருணங்களைத் தேடிச் செல்வது பற்றியது அல்ல. மாறாக, அனைவரும் பிரகாசிக்கும் சூழலை உருவாக்குவது பற்றியது.

5. சுவர்களை விட்டு பாலங்களைத் தேர்ந்தெடுத்தல்

நமது வேலையை பாதுகாப்பதும், தனித்து வேலை செய்வதும் எளிது. ஆனால் தலைவர்கள் இந்த உந்துதலை எதிர்க்கிறார்கள். அவர்கள் செயல்பாடுகளில் ஒத்துழைப்பு தருகிறார்கள், கிடைக்கும் நற்பெயரைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மற்றவர்கள் தவறவிடும் புள்ளிகளை இணைக்கிறார்கள். ஒத்துழைப்பு விளைவுகளைப் பெருக்குகிறது. ஆனால், தனிமை மக்களை கட்டுப்படுத்துகிறது.

6. புகழை விட மதிப்புகளுக்கு முன்னுரிமை

பின்தொடர்பவர்கள் டிரெண்ட் அல்லது வெளிப்புற அழுத்தங்களுக்கு எளிதில் வளைந்துக் கொடுக்கிறார்கள். தலைவர்கள் கொள்கைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் அங்கீகாரத்தை இழந்தாலும் கூட. அவர்களின் அடையாளம் நேர்மை. அது அவர்களை ஊக்குவிக்கும் விசுவாசத்தில் வெளிப்படுகிறது.

Leadership

7. கவனச்சிதறலை விட கவனத்தைத் தேர்ந்தெடுத்தல்

முடிவில்லா பணிச்சுமைகள் நிறைந்த உலகில், தலைவர்கள் முன்னுரிமைகள் விஷயத்தில் சமரசமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இலக்கை அடைய ‘ஆம்’ என்பதை விட ‘இல்லை’ என்று அதிகமாக கூறுகிறார்கள்.

பின்தொடர்பவர்கள் தங்களை ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஆனால் தலைவர்கள் தங்கள் கவனத்தைப் பாதுகாக்கிறார்கள்.

8. வசதியை விட வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்தல்

தலைவர்கள் என்பவர்கள் நிரந்தர மாணவர்கள். அவர்கள் கற்கிறார்கள், வழிகாட்டிகளைத் தேடுகிறார்கள், கருத்துகளை வரவேற்கிறார்கள். அது கசப்பானதாக இருந்தாலும் கூட. ஆனால் பின்தொடர்பவர்கள் பெரும்பாலும் மாற்றத்தை எதிர்க்கிறார்கள். ஆறுதல் மண்டலத்தில் வளர்ச்சி என்பது ஒருபோதும் நடக்காது என்பதை அறிந்த தலைவர்கள் மாற்றத்தை துரத்துகிறார்கள்.

9. பாதுகாப்பு வலைகளை விட ஆபத்துகளைத் தேர்ந்தெடுத்தல்

பாதுகாப்பாக விளையாடுவது சூழல்களை நிலையாக வைத்திருக்கக் கூடும். ஆனால், அது பெரிய முன்னேற்றங்களை உருவாக்காது. தலைவர்கள் நிச்சயமற்ற தன்மைக்குள் நுழைகிறார்கள். ஆனால் ஆபத்துகளை கணக்கிட்டவர்களாக. அதே நேரத்தில், பின்தொடர்பவர்கள் பிறரால் ‘நிரூபிக்கப்பட்ட’ பாதைகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

10. அதிக தலைவர்களை உருவாக்க விரும்புதல்

பின்தொடர்பவர்கள் வழிகாட்டுதலைத் தேடுகிறார்கள். தலைவர்கள் அதை வழங்குகிறார்கள். உண்மையான தலைவர்கள் அதிகாரத்தை குவிப்பதில்லை. அவர்கள் வழிகாட்டுகிறார்கள், அதிகாரம் அளிக்கிறார்கள், மற்றவர்களை வழிநடத்துகிறார்கள். செல்வாக்கு என்பது ஆளுமையாக மாறுவது இப்படித்தான்.

தலைமைத்துவம் என்பது ஒரு பெரிய தருணத்தைப் பற்றியது அல்ல. இது உத்தி ரீதியான, பணிவான மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட தினசரி முடிவுகளின் தொடராகும். அவை காலப்போக்கில் ஒன்றிணைகின்றன. பின்தொடர்பவர்கள் வழிநடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தலைவர்கள் முன்னேறுகிறார்கள், அது வசதியானதாக இல்லாவிட்டாலும் கூட. அந்தத் தெரிவுகளில், இருவருக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது.

மூலம்: ஆஸ்மா கான்


Edited by Induja Raghunathan

facebook twitter