+

5,000 தமிழக இளைஞர்கள் பங்குகொண்ட சாம்சங்கின் புத்தாக்க திட்டம் ‘Solve For Tomorrow’

சமூகப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் இளைஞர் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் சாம்சங்கின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியான ‘சால்வ் ஃபார் டுமாரோ’ திட்டம், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்

சமூகப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் இளைஞர் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் சாம்சங்கின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியான ‘சால்வ் ஃபார் டுமாரோ’ (Solve For Tomorrow) திட்டம், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று தங்களது புதுமையான யோசனைகளை செயல்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

Samsung Innovation Solve for tomorrow

பரிவு, சமூகப் பொறுப்பு மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறனை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், பல்வேறு சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுக்கு ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்தும் கருவிகள், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் வளர்ச்சி சார்ந்த செயலிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் இந்தத் திட்டத்தின் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளன.

இந்தியாவில் தனது 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடி வரும் சாம்சங், ‘சால்வ் ஃபார் டுமாரோ’ போன்ற திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி சூழலை வலுப்படுத்துவதில் உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் இளம் மாற்றுச் செயற்பாட்டாளர்களுக்கு வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் இன்கியூபேஷன் ஆதரவை வழங்குவதன் மூலம் சமூக நலனுக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த முயற்சி முக்கிய பங்காற்றி வருகிறது.

2026-ஆம் ஆண்டுக்கான ‘சால்வ் ஃபார் டுமாரோ’ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க ஜூலை 3 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்ற அணிகளில், சென்னை மாணவர்கள் உருவாக்கி வரும் ‘டச் பேட்’ (TouchPad) திட்டம் குறிப்பிடத்தக்கதாகும். பார்வையற்றோருக்காக உரைகள் மற்றும் படங்களை உடனுக்குடன் பிரெய்லி எழுத்துகளாக மாற்றிக் காட்டும் தொடு உணர்வு (Tactile Display) சாதனத்தை இந்த அணி உருவாக்கி வருகிறது.

மேலும், சென்னை மாணவர்கள் அடங்கிய ‘ஸ்போர்ட்ஸ் ஃபார் ஆட்டிசம்’ (Sports4Autism) அணி, ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டு அடிப்படையிலான சிகிச்சை செயலியை உருவாக்கி வருகிறது.

அதேபோல், கோயம்புத்தூர் மற்றும் மதுரையைச் சேர்ந்த மாணவர் அணிகள் தசைச் சிதைவு நோயாளிகளுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை இல்லாத கேட்கும் திறன் மேம்பாட்டு கருவிகள் தொடர்பான புதுமையான திட்டங்களை உருவாக்கியுள்ளன.

facebook twitter