
பொருளாதார ஞானத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நம் மனம் பெரும்பாலும் பணக்காரர்கள் அல்லது அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் பக்கமே சாய்கிறது. ஆனால், உண்மை நிலை வேறு விதமானது.
உலகெங்கிலும் உள்ள நடுத்தர வர்க்க குடும்பங்களால் பல புத்திசாலித்தனமான உத்திகள் ஒவ்வொரு நாளும் அமைதியாகப் பின்பற்றப்படுகின்றன. இவர்கள் ஆடம்பரமாக வாழும் மக்கள் அல்ல, அதேநேரம் அவர்கள் கடனில் மூழ்குவதும் இல்லை. அவர்கள் தங்கள் வருமானத்துக்குள் வாழ்கிறார்கள், சிந்தனைமிக்க பொருளாதார முடிவுகளை எடுக்கிறார்கள். ஒரே சம்பளத்தில் நிதி பாதுகாப்பை உருவாக்குகிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தினரின் பழக்கவழக்கங்களில் கவனிக்கத் தகுந்தவையாக இருப்பது அவற்றின் நிலைத்தன்மை, ஒழுக்கம் மற்றும் நீடித்த மனநிலை. இந்தப் பழக்கங்கள் வெளிப்புறமாக கவர்ச்சியாகத் தோன்றாது. ஆனால் காலப்போக்கில், அவை கடனில் சிக்காமல் தவிர்க்கவும், அதிகமாகச் சேமிக்கவும், குறைந்த பொருளாதார அழுத்தத்துடன் வாழ்க்கையை வாழவும் உதவுகின்றன.
இந்த நடுத்தர வர்க்கப் பழக்கங்களை ஏற்றுக்கொள்வது பொருளாதார சுதந்திரத்தை நோக்கிய உங்களின் சிறந்த படியாக இருக்கலாம். எனவே, நடுத்தர வர்க்கத்தினரின் இந்த 5 பயனுள்ள பணப் பழக்கங்களை பார்க்கலாம். இது எவரையும் புத்திசாலித்தனமாகச் செலவு செய்பவராக மாற்ற உதவும் பழக்கவழக்கங்கள்.

1. பட்ஜெட் போடுவதன் பலன்
நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட்டின் சக்தியைப் புரிந்துகொள்கிறார்கள். எவ்வளவு வருகிறது, எவ்வளவு வெளியே செல்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். யூகிக்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ செய்வதற்கு பதிலாக, அவர்கள் திட்டமிடுகிறார்கள்.
- அத்தியாவசிய செலவுகளை (வாடகை, மளிகைப் பொருட்கள் மற்றும் பில்கள் போன்றவற்றை) முன்னுரிமைப்படுத்துங்கள். சேமிப்பு அல்லது அவசரநிலைகளுக்கு நிதி ஒதுக்குங்கள்
- அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும்.
- ஒரு பட்ஜெட் போடுவது என்பது தெளிவைக் கொண்டுவருகிறது. இது நம்மை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், பொருளாதார பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
2. தரத்துக்கே முக்கியத்துவம் தருதல்
நடுத்தர வர்க்க குடும்பங்கள் பெரும்பாலும் டிரெண்டை விட நீடிக்கும் தன்மையை மதிப்பிடுவதன் மூலம் புத்திசாலித்தனமாக செலவு செய்கிறார்கள்.
அடிக்கடி மாற்றும் பல மலிவான பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, அவர்கள் தரமான பொருட்களைத் தேர்வு செய்கிறார்கள். அதாவது, முன்கூட்டியே சற்று அதிகமாக செலவு செய்ய வேண்டியிருந்தாலும் கூட.
உதாரணத்திற்கு:
> மூன்று மலிவான காலணிகளை வாங்குவதற்குப் பதிலாக ஒரு நல்ல ஜோடி காலணிகளில் முதலீடு செய்தல்.
> உத்தரவாதங்களுடன் கூடிய நம்பகமான மின்னணு சாதனங்கள் அல்லது உபகரணங்களை வாங்குதல்.
> பல வருடங்களுக்கு நீடிக்கும் தரமாக தயாரிக்கப்பட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது.
இந்தப் பழக்கம் நீண்ட காலத்திற்கு பணத்தை மிச்சப்படுத்தவதோடு, சிந்தனையுடன் கூடிய நுகர்வையும் ஊக்குவிக்கிறது.

படம்: மெட்டா ஏஐ
3. அவசியமில்லாமல் கடன் வாங்கமாட்டார்கள்
நடுத்தர வர்க்கத்தினர் கடன் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அவர்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம் என்றாலும், அவர்கள் பெரும்பாலும் அதை தவிர்க்கிறார்கள். கடன்கள் பொதுவாக வீடு அல்லது கல்வி போன்ற முக்கிய வாழ்க்கை முதலீடுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும், வாழ்க்கை முறை மேம்பாடுகளுக்கு அல்ல.
எதெல்லாம் முக்கியம்?
> ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு பில்களை முழுமையாக செலுத்துதல்.
> ஆடம்பர பொருட்களுக்கான தனிநபர் கடன்களைத் தவிர்ப்பது.
> கடன் வாங்குவதற்கு முன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தல்.
தேவையற்ற கடனில் இருந்து விலகி இருப்பது அதிக வட்டி செலுத்துதலில் இருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. அவர்களின் நிதியை நிலையானதாக வைத்திருக்கிறது.
4. அவசர தேவைகளுக்குத் திட்டமிடல்
நடுத்தர வர்க்கத்தினரின் பொதுவான பணப் பழக்கம் என்னவென்றால், அவசர நிதியை உருவாக்கி அதை பராமரிப்பதுதான். வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள். மாதத்திற்கு ரூ.1,000 மட்டுமே சேமிப்பதாக இருந்தாலும், அவர்கள் அதை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கள்.
எதெல்லாம் அவசர தேவைகள்?
- மருத்துவ அவசர தேவைகள்
- வேலை இழப்பு
- வீடு அல்லது வாகனம் பழுதுபார்ப்பது
5. உணர்ச்சிவசப்படாமல் மனப்பூர்வமாக செலவு செய்தல்
நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் தங்கள் செலவுகளில் மனப்பூர்வமாக ஈடுபடுகிறார்கள். அவர்கள் இந்த விஷயத்தில் உணர்வுகளுக்கு இடம் கொடுப்பதில்லை. தினசரி காபிகளைத் தவிர்ப்பதாக இருந்தாலும் சரி, அல்லது அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங்கை வேண்டாம் என்று சொல்வதாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒவ்வொரு செலவின் மதிப்பையும் எடைபோடுகிறார்கள்.

படம்: மெட்டா ஏஐ
அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வது:
> எனக்கு இது தேவையா அல்லது இப்போதே வேண்டுமா?
> இந்த கொள்முதல் நீண்டகால திருப்தியைத் தருமா அல்லது குறுகிய கால மகிழ்ச்சியைத் தருமா?
> இதே முடிவை பெறுவதற்கு வேறு ஒரு சிறந்த வழி இருக்கிறதா?
கவனத்துடன் செலவு செய்வது, பணவீக்கம் மற்றும் மன அழுத்ததுக்கு ஆளாகமல் அவர்களைத் தடுக்கிறது.
வலுவான பொருளாதார எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சீராகவும், விழிப்புடனும், பொறுமையுடனும் இருந்தாலே போதும்.
நடுத்தர வர்க்கம் செழித்து வளர்வது பெரிய வருமானத்தால் அல்ல. மாறாக, காலப்போக்கில் அதிகரிக்கும் சிறிய தினசரி முடிவுகளால் தான். நீங்கள் செல்வத்தை உருவாக்க விரும்பினால் அல்லது உங்கள் பணத்தை அதிகமாக்க விரும்பினால், இந்த 5 பழக்கங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தொடங்குங்கள்.
புத்திசாலித்தனமான செலவு என்பது கட்டுப்பாடு பற்றியது அல்ல. அது நோக்கம் பற்றியது, அது யாரும் பின்பற்றக் கூடிய ஒரு பழக்கம்.
மூலம்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan