
ஆபரணத் தங்கம் விலை இன்றும் இதுவரை அல்லாத அளவுக்கு புதிய வரலாற்று உச்சத்தை எட்டி, நகை வாங்க விழைவோருக்கு ஷாக் தந்துள்ளது. சவரன் விலை தற்போது ரூ.78,000-ஐ நெருங்கியுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.85 உயர்ந்து ரூ.9,705 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.680 உயர்ந்து ரூ.77,640 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.93 உயர்ந்து ரூ.10,588 ஆகவும், சவரன் விலை ரூ.774 உயர்ந்து ரூ.84,704 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.78,000-ஐ எட்ட வெறும் ரூ.200 மட்டுமே குறைவாக உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிதான் ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டுவதற்கு முக்கிய காரணம். சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையில் பெரிதாக மாற்றம் இல்லாவிட்டாலும் உச்சத்திலேயே நீடிக்கிறது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (2.9.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.9,725 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.77,800 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.10,609 ஆகவும், சவரன் விலை ரூ.168 உயர்ந்து ரூ.84,872 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (2.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.136 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,36,000 ஆகவும் வரலாறு காணாத உச்சத்தில் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88 அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியுடன் நீடிக்கிறது. இதுவே, ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, அமெரிக்காவின் 50% வரிவிப்பு என்பது இந்திய தொழில் துறை தடுமாற்றம் காண வைத்துள்ளது. இதனால், ரூபாய் மதிப்பும் குறைந்து, தங்கம் விலை தொடர்ந்து உயர வழிவகுத்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,725 (ரூ.20 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.77,800 (ரூ.160 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,609 (ரூ.21 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,872 (ரூ.168 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,725 (ரூ.20 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.77,800 (ரூ.160 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,609 (ரூ.21 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,872 (ரூ.168 உயர்வு)
Edited by Induja Raghunathan