
TNRising - ஐரோப்பா முதலீட்டு பயணத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.3819 கோடியின் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம், 9,070 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வரின் ஜெர்மனி பயணத்தின் முழு முதலீட்டுத் தொகை ரூ.7020 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தம் 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 15,320 வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.

முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
Vensys Energy – ரூ. 1068 கோடி முதலீடு, 5,238 வேலைவாய்ப்புகள்
BASF – ரூ. 300 கோடி, 100 வேலைவாய்ப்பு
Bella Premier Happy Hygiene – ரூ. 300 கோடி, 200 வேலைவாய்ப்பு
Herrenknecht India – ரூ. 250 கோடி, 400 வேலைவாய்ப்பு
Puls – ரூ. 200 கோடி, 500 வேலைவாய்ப்பு
Witzenmann India – ரூ. 200 கோடி, 450 வேலைவாய்ப்பு
MASH Energy – ரூ. 200 கோடி, 200 வேலைவாய்ப்பு.
இதற்கு முந்தைய ஒப்பந்தங்கள்:
Knorr-Bremse – ரூ. 2000 கோடி, 3,500 வேலைவாய்ப்புகள்
Nordex Group – ரூ. 1000 கோடி, 2,500 வேலைவாய்ப்புகள்
ebm-papst – ரூ. 201 கோடி, 250 வேலைவாய்ப்புகள்

இவை அனைத்தும் தமிழகத்தின் சிறந்த தொழில்துறை சூழல் மற்றும் முதலமைச்சரின் நிர்வாகத்துக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இது தொடர்பான செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.
Guidance Tamil Nadu, ஜெர்மனியின் Next Mittelstand நிறுவனத்துடன் இணைந்து, dual vocational training முறை தமிழகத்தில் அறிமுகமாகிறது. ஆரம்ப கட்டத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கி, 10 ஆண்டுகளில் 20,000 மாணவர்களை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஐரோப்பியப் பயணம் இங்கிலாந்து வழியாக தொடர்கிறது, மேலும் முதலீட்டாளர் சந்திப்புகள் மற்றும் தமிழர் அமைப்புகளுடனான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.