ரூ.1,900 கோடியை இலக்காகக் கொண்ட 'அர்பன் கம்பெனி' (Urban company) நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப்பங்கு வெளியீடு (IPO) செப்டம்பர் 10ம் தேதி திறக்கிறது.
Urban Company Ltd; ரூ.1,900 கோடி மதிப்பிலான தொடக்கப் பொதுப் பங்கு வெளியீடு (IPO) ஒன்றை செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 12ம் தேதி முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த IPOவில், ரூ.472 கோடி புதிய பங்குகள் வெளியிடப்படுவதோடு, ரூ.1,428 கோடி மதிப்பிலான பங்குகளை ஏற்கனவே முதலீடு செய்த Accel, Bessemer Venture Partners, Elevation Capital, Tiger Global மற்றும் Vy Capital ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.
பிஎஸ்இ (BSE) மற்றும் என்எஸ்இ (NSE) பங்குச் சந்தைகளில் அர்பன் கம்பனி பங்குகள் பட்டியலிடப்படவுள்ளன. 2014-ம் ஆண்டு அர்பன்கிளாப் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த குருக்ராம் தலைமையகமான நிறுவனம், நிறுவனர் அபிராஜ் சிங் பால், ராகவ் சந்திரா மற்றும் வருண் கைதான் ஆகியோரால் நிறுவப்பட்டது.
2025-ஆம் நிதியாண்டில், நிறுவனம் முதல் முறையாக ஆண்டு லாபத்தை பதிவு செய்தது.
2023ல் வருவாய்: ரூ.656.6 கோடி
2024-ல் வருவாய்: ரூ.885.9 கோடி
2025-ல் வருவாய்: ரூ.1,373.5 கோடி
20225-ல் நிகர லாபம்: ரூ.135 கோடி
2024-ல் நட்டம்: ரூ.178.8 கோடி
2023-ல் நட்டம்: ரூ.496.7 கோடி
வருவாய் வகையினங்கள்:
அழகு மற்றும் நல சேவைகள்: ரூ.720 கோடி (இது மொத்த வருவாயில் பாதிக்கும் கூடுதல்)
வீட்டு பழுது மற்றும் பராமரிப்பு: ரூ.360 கோடி
சுத்தம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு: ரூ.210 கோடி
வேறு சேவைகள் (ஓவியம், ஃபிட்னஸ்): ரூ.83 கோடி
இந்தியாவிலிருந்து நிறுவனத்திற்குக் கிடைத்த வருவாய் : ரூ.1,275 கோடி (93%) ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலிருந்து உருவான வருவாய் ரூ.99 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் அதன் செயல்பாட்டு பணப்புழக்கங்களையும் மேம்படுத்தி, நிதியாண்டு 2023-ல் எதிர்மறையாக ரூ.408.3 கோடியாகவும், நிதியாண்டு 24-ல் எதிர்மறையாக ரூ.85.1 கோடியாகவும் இருந்ததிலிருந்து நிதியாண்டு 25-ல் நேர்மறையாகத் திரும்பி ரூ.212.6 கோடியாக மாறியது. கடந்த நிதியாண்டின் இறுதியில் அதன் நிகர மதிப்பு ரூ.855.9 கோடியாக அதிகரித்தது, அதே நேரத்தில் கடன்கள் ரூ.60 கோடிக்கும் குறைவாக இருந்தன.

நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு: ரூ.855.9 கோடி; கடன்கள்: ரூ.60 கோடிக்கும் குறைவு.
நிறுவனம் தற்போது ஜிஎஸ்டி வகைப்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த வழக்குகளில் தனியார் சேவை வழங்குனர்களை "ஊழியர்கள்" என அடையாளம் காணும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நிறுவனத்தின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மொத்த IPO வெளியீட்டில், ரூ.1,428 கோடி விற்கும் பங்குதாரர்களுக்குச் செல்லும், மீதமுள்ள ரூ.472 கோடி நிறுவனத்தால் தக்கவைக்கப்படும். புதிய வெளியீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்தல், செயல் மூலதனம் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.