
இந்தியாவின் தொழில்நுட்ப வரலாற்றில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ரிலையன்ஸ் நுழைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் மற்றும் மெட்டா பிளாட்ஃபாம்ஸ் இன்க் (முன்னர் ஃபேஸ்புக்) இணைந்து இந்திய நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) வழங்கும் ஒரு புதிய இணைமுயற்சியை உருவாக்க உள்ளன.
இந்திய AI சந்தையில் வரவிருக்கும் பெரும் மாற்றத்திற்கான அடித்தளமாக இந்த கூட்டணி கருதப்படுகிறது. இது, தொழில்நுட்ப வசதிகளை நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை விரிவாக்கக்கூடிய புதிய பரிணாமமாக பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம், ரூ.855 கோடி 100 மில்லியன் டாலர்) முதலீட்டுடன் தொடங்கப்பட உள்ளது. இதில் ரிலையன்ஸ் 70% பங்கையும், மெட்டா 30% பங்கையும் வைத்திருக்கும், என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, மெட்டாவின் ஓபன் சோர்ஸ் லாமா மாடல்களால் இயக்கப்படும் நிறுவன கருவிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.

லாமா மாடலுடன் புதிய செயற்கை நுண்ணறிவுத் தேடல்கள்:
மெட்டா நிறுவனத்தின் open-source Llama மாடல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த புது நிறுவனம் இரண்டு முக்கிய சேவைகளை வழங்கும்:
Platform-as-a-Service (PaaS): இதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்கேற்ப AI மாடல்களை மாற்றியமைத்து இயக்க முடியும்.
Pre-configured AI Applications: அதாவது, முன்-தயாரிக்கப்பட்ட செயற்கைப் பயன்பாடுகள். இதன் மூலம் விற்பனை, சந்தைப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம், பணியாளர்களின் சேவை மற்றும் நிதி என பல துறைகளை மையமாகக் கொண்டு இதனைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரை பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கு நிறுவனத்தரத்திலான AI-ஐ அணுகக்கூடிய வகையில் இது அமையுமாறு இரு நிறுவனங்களும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.
Jio இணையதள தளங்கள், RIL-ஐ சேர்ந்த data centre-கள் மூலம் இந்த தொழில்நுட்ப சேவைகள் குறைந்த தாமதத்துடன், பாதுகாப்பாகவும், குறைந்த செலவில் வழங்கப்படும். ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறும்போது,
“இந்த கூட்டாண்மை, இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு enterprise-level AI-ஐ கொண்டுசென்று, அவர்களை வேகமாக புதுமை செய்ய வைக்கும், செலவுகளை குறைக்கும் மற்றும் உலக சந்தையில் போட்டியிடும் வலிமையை தரும்,” என்றார்.
மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறும்போது,
“இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தையில், நமது திறந்த மூல AI மாடல்களை செயல்படுத்த இந்த கூட்டணி பெரும் வாய்ப்பு அளிக்கிறது,” என்றார்.
கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசும்போது,
“இந்தியாவில் உள்ள AI வாய்ப்பு அபாரமானது. எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் சிறு கடைகள் வரை பல துறைகள் இதில் மாற்றமடையும். கூகிளும் ரிலையன்ஸும் இணைந்து ஜாம்நகரில் புதிய Google Cloud Region ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளன. இது பசுமை ஆற்றல் மூலம் இயக்கப்படும் என்றும் Jio வலையமைப்புடன் இணைக்கப்படும்,” என்றும் கூறினார்.