+

புதிய ஸ்டோர்களுடன் விரிவாக்கம் அடைந்த அம்பானியின் சில்லரை வர்த்தகத் தொழில்!

இந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் நிறுவனமான ரிலையன்ஸ் ரீட்டெயில், கடந்த ஆண்டில் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டு முழுவதும் நுகர்வோர் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் பல்துறைகளிலும் விரிவடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி கூறும்போது, நிறுவனம் ஆரம்பித்துள்ள புதிய

இந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் நிறுவனமான ரிலையன்ஸ் ரீட்டெயில், கடந்த ஆண்டில் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டு முழுவதும் நுகர்வோர் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் பல்துறைகளிலும் விரிவடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி கூறும்போது, நிறுவனம் ஆரம்பித்துள்ள புதிய FMCG (Fast-Moving Consumer Goods) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) கடந்த ஆண்டு ரூ.11,500 கோடி ($1.4 பில்லியன்) வருமானம் ஈட்டியுள்ளதாகக் கூறினார். இது இந்தியாவில் இதுவரை வேகமாக வளர்ந்த FMCG நிறுவனம் என்ற பெருமையுடன் உள்ளது, என்றார்.

ரிலையன்ஸ் சில்லரை வர்த்தகப் பிரிவு தலைவர் இஷா அம்பானி கூறும்போது,

“கடந்த ஆண்டு மட்டும் 2,659 புதிய கடைகள் தொடங்கப்பட்டதாகவும், தற்போது 7,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் 19,340 கடைகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது மொத்தம் 77 மில்லியன் சதுர அடிக்கு மேல் பரப்பளவில் பரந்துள்ளது. எங்கள் வருமானத்தில் 70% கடைகளிலிருந்தே வருகிறது. ஆண்டுக்கு 2,000–3,000 கடைகளைத் தொடங்குவோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டிஜிட்டல் காமர்ஸ் வளர்ச்சி பற்றி பேசிய இஷா அம்பானி, தற்போது ரீட்டெயில் வருமானத்தில் அதிக ஒற்றை இலக்க பங்களிப்பாக இருக்கும் ஆன்லைன் விற்பனை, மூன்று ஆண்டுகளில் 20%–ஐத் தாண்டும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆண்டு முழுவதும் 1.4 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதையும், பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர் எண்ணிக்கை 15% வளர்ச்சி அடைந்து 349 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றார்.

Reliance Retail

நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்லும் துரித வர்த்தகத் (Hyperlocal Quick Commerce) துறையில் ரிலையன்ஸ் முன்னணியில் இருப்பதாகவும், நாடு முழுதும் உள்ள கடைகள், டார்க் ஸ்டோர்கள் மற்றும் வாடிக்கையாளர் தரவுத் தளங்கள் மூலம் அது சாத்தியமாகியுள்ளது. வருங்காலத்தில் வளர்ச்சி ஆண்டுக்கு 20% ஐத் தாண்டும் என்றார் இஷா அம்பானி.

இந்த வளர்ச்சிக்கான காரணங்களாக அவர் எதிர்பார்ப்பதாவது:

1.சொந்த பிராண்டுகள்

2. கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளின் மூலம் நுகர்வோர் நடத்தைப் பற்றிய புரிதல்கள்

3. வலுவான சோர்ஸிங் அமைப்பு

4.ஓம்னி-சேனல் சில்லரை வணிகம்

5. தொழில்நுட்ப ஆதரவுடன் இயங்கும் மிகப்பெரிய விநியோக சங்கிலி

6. மெட்ரோ மற்றும் ஜியோமார்ட் டிஜிட்டல் வழியாக 42 லட்சம் கிரானா கடைகள் மற்றும் வணிகர்களின் பலப்படுத்தல்

7. மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்கள்

8. 2.5 லட்சம் ஊழியர்களின் வலிமை.

RCPL நேரடி ரிலையன்ஸ் துணை நிறுவனமாக மாறுவது, ஆண்டுதோறும் 8% வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் $2 டிரில்லியன் நுகர்வோர் சந்தையில் மேலும் கவனத்தக் குவிக்க அனுமதிக்கும், என்றார்.

இந்தக் குழுமம், $1.2 டிரில்லியன் ஒருங்கிணைந்த வாங்கும் சக்தியைக் கொண்ட 350 மில்லியன் குடும்பங்களைக் கொண்ட வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரையும், கிராமப்புற சந்தைகளையும் வளர்ச்சிக்கான பெருவாய்ப்பாகப் பார்க்கிறது.

"ரிலையன்ஸ் சில்லறை விற்பனை இந்தியாவின் நுகர்வு உயர்ச்சியில் மட்டும் பங்கேற்கவில்லை. நாங்கள் அதை முன்னெடுத்து வருகிறோம், சந்தை மற்றும் சிறந்த வழிமுறைகளுடன், 20% வளர்ச்சி இலக்கை மிஞ்சும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது," என்கிறார் இஷா அம்பானி.
facebook twitter