ஸ்டார்ட் அப்'கள் அரிதாகவே பரபரப்பை ஏற்படுத்தியபடி தோல்வி அடைகின்றன. பெரும்பாலும் அவை சத்தமில்லாத, தடுத்து நிறுத்தக்கூடிய வழிகளில் முடிந்து போகின்றன.
அதோடு, தங்கள் எண்ணம் வலுவாக இல்லை அல்லது நிதி கிடைப்பது நின்று விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக பல நிறுவனர்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், பிரகாசமான வாய்ப்புள்ள பல ஸ்டார்ட் அப்'கள், துவக்கத்திலும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்ட பல தவிர்க்க கூடிய முடிவுகளால் தான் மண்ணைக் கவ்வுகின்றன.
பிரச்சனை மோசமான எண்ணங்கள் (ஐடியா) அல்ல), அவை மோசமான செயல்படுத்தப்பட்டது தான். நல்ல ஸ்டார்ட் அப்களை தோல்வி அடைய செய்யக்கூடிய நிறுவனர்கள் தவறுகளை சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
நிறுவனர்கள் செய்யும் 5 முக்கிய தவறுகள்
1. தவறான பிரச்சனை தேர்வு
இது தான் மிகப்பெரிய தவறாக அமைகிறது. பெரும்பாலும் நிறுவனர்கள், பெரிய அளவிலான, தேவை உள்ள மற்று வளர்த்தெடுக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு பதிலாக ஆர்வம் உள்ள பிரச்சனையை தேர்வு செய்கின்றனர். ஒரு பொருள், சுவாரஸ்யமான தீர்வு வழங்கலாம், ஆனால் அது எல்லோருக்கும் தேவைப்படாது. இதனால் வளர்ச்சி சாத்தியமாகாது.
சந்தைக்கு பொருத்தமான தன்மையும், வளர்ச்சியுமே தேவை. இலக்கு சந்தை சிறியதாக அல்லது தேர்வுக்கு உரியது எனில் தோல்வி நிச்சயம். பலருக்கு முக்கிய பிரச்சனையை நாடும் ஸ்டார்ட் அப்கள் வெற்றி பெறுகின்றன.
Quibi நிறுவனம் மொபைல் குறும் வீடியோக்களுக்காக $1.75 பில்லியன் நிதி திரட்டியது. இந்த ஐடியா நன்றாக இருந்தது. ஆனால், பயனாளிகள் பழக்க வழக்கத்தை சரியாக கணிக்கவில்லை. மக்கள் ஏற்கனவே யூடியூப்பிலும், இன்ஸ்டா, டிக்டாக்கில் குறும் வீடியோ காண்கின்றனர். இந்நிறுவனம் தீர்வு காண முயன்ற பிரச்சனை ஈர்க்கவில்லை. ஆறு மாதங்களில் மூடப்பட்டது.
2. தெளிவான நோக்கம் இல்லாதது
பல ஸ்டார்ட் அப்கள் தங்கள் குறிக்கொள்ளை வரையறுக்காமலே சேவைகளை உருவாக்கத்துவங்குகின்றன. ஏன் எனும் கேள்விக்கான தெளிவான பதில் இல்லை எனில் சிக்கல் தான். இதனால் குழுக்கள் ஆர்வம் இழக்கின்றன. வாடிக்கையாளர்களால் நீண்ட கால மதிப்பை உணர முடிவதில்லை.
வழிகாட்டுவதற்கு தெளிவான பார்வை வேண்டும். இது நியமனங்களில் உதவி, சேவை உருவாக்கத்தில் கைகொடுக்கிறது. நெருக்கடி சூழலிலும் தெளிவான பார்வையை வழிகாட்டுகிறது.
’வீவொர்க்’ (WeWork) நல்ல உதாரணம். நிறுவனம் தெளிவான மைய அடையாளம் இல்லாமல் பல்வேறு பிரிவுகளில் விரிவாக்கம் செய்தது. அதன் தெளிவில்லாத நோக்கம், முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்க வைத்து, நிர்வாக சிக்கல்களை உண்டாக்கி, 2019ல் ஐபிஓ முயற்சியையும் தோல்வி அடைய வைத்தது.
3. நிறுவனர்கள் முரண்
இணை நிறுவனர்கள் மோதல் ஸ்டார்ட் அப் தோல்விகளுக்கு வழி வகுக்கலாம். சரியாக பேசப்படாத சமபங்கு பிரிவினை, பொறுப்புகளில் தெளிவின்மை அல்லது பேசப்படாத எதிர்பார்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஆகலாம். சின்ன விரிசல் பின்னாளில் பெரிய பிளவை ஏற்படுத்தலாம்.
துவக்கத்திலேயே சிக்கலான உரையாடல்களை தவிர்ப்பது அதை தாமதமாக்க மட்டுமே செய்கிறது. வலுவான நிறுவனர் குழுக்கள், உரிமை, அதிகாரம், பொறுப்புகளை முதலிலேயே பேசி முடிவு செய்கின்றன.
4. அவசர நியமனம்
ஆரம்ப நிதி வேகமாக வளரும் உற்சாகத்தை அளிக்கலாம். இதனால் நிறுவனர்கள் ஆர்வ மிகுதியால் சந்தை புரிதல் ஏற்படும் முன் நியமனங்களை மேற்கொள்ளலாம். ஆனால் இது ரொக்க நிலையை பாதிக்கும்.
ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்கள் ஊழியர் எண்ணிக்கையினால் அல்லாமல் கவனத்தால் மட்டுமே வெல்கின்றன. பொருத்தமான சிறிய குழு, பெரிய குழுவை விட மேம்பட்டது. வளர்ச்சி நம்பிக்கையினால் மட்டும் வந்து விடுவதில்லை. அதற்கு சந்தை ஆதரவு தேவை. நிதி கிடைத்த போது பல நகரங்கள், பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்த டன்சோ நல்ல உதாரணம். ஆனால் வளர்ச்சி மற்றும் நிதி சிக்கலான போது, நிறுவனத்தால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
5. தேவைக்கு முன் வளர்ச்சி
தேவையை உறுதி செய்யும் முன் விரிவாக்கம் செய்வது கையில் இருக்கும் முதலீட்டை வேகமாக கரைக்கக் கூடியது. முறையான வாடிக்கையாளர்கள் ஆதரவு இல்லாமல், நியமனம், உள்கட்டமைப்பு உருவாக்கம் நிலையில்லாத வளர்ச்சிக்கே வழி வகுக்கும்.
ஏற்கனவே செயல்படும் ஒன்றை தான் வளர்த்தெடுக்க முடியும். உதாரணமாக, ’டைனி அவ்ல்’ (Tiny Owl) நீடிக்கக் கூடிய லாப விகிதம் இல்லாமலே பல நகரங்களில் தீவிர விரிவாக்கம் செய்தது. அதிக ரொக்க பயன்பாடு, மோசமான செயலாக்கம், ஆரம்ப ஆதரவை மீறி தோல்வியை உண்டாக்கலாம்.
இந்த தவறுகள் தொடர்வது ஏன்?
இந்த தவறுகள் உள் நோக்கம் இல்லாதவை. வரையறுக்கப்படாத லட்சியங்களால் வருபவை. ஒழுக்கம் இல்லாத துடிப்பும், அடித்தளம் இல்லாத நம்பிக்கையும் இவற்றுக்கான காரணங்கள். நிறுவனர்கள் உள் உணர்வு சார்ந்து இயங்கும் தன்மை கொண்டவர்கள். ஆனால், தெளிவில்லாமல் செயல்படுவது சிக்கலை உண்டாக்கும். வெற்றிக்கு வழி வகுப்பது புதுமையாக்கம் அல்ல, ஒழுக்கம் மற்றும் செயலாக்கம்.
எனவே, நல்ல ஸ்டார்ட் அப்கள் தவிர்க்கக் கூடிய காரணங்களினால் தான் தோல்வி அடைகின்றன. நிறுவனர்கள் நோக்கத்தை துவக்கத்திலேயே தெளிவாக கொள்ள வேண்டும். இணை நிறுவனர்களுடன் நல்ல புரிதல் வேண்டும். கவனமாக நியமனங்கள் செய்ய வேண்டும். சந்தை உறுதிக்கு பின் தான் வளர்ச்சி காண வேண்டும். இவை எதுவுமே ஈர்ப்பு மிக்கவை அல்ல. அனால் வெற்றிக்கும், தோல்விக்குமான வித்தியாசத்தை ஏற்படுத்த வல்லவை.
மூலம்: ஆஸ்மா கான்
Edited by Induja Raghunathan