சிலிக்கான் வேலியை தலைமையகமாக கொண்ட எம்படெட் அமைப்புகள் மற்றும் எட்ஜ் ஏஐ தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'எம்பட் யூஆர் சிஸ்டம்ஸ்' (embedUR systems) அடுத்த தலைமுறை எட்ஜ் ஏஐ மேடை மற்றும் பியூஷன் ஸ்டூடியோ மென்பொருள் ‘மாடல் நோவா’ அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், சென்னையில் 100 பொறியாளர் கொள்திறன் கொண்ட பிரத்யேகமான ’எட்ஜ் இண்டலிஜன்ஸ் மையத்தை’ அமைப்பதாவும் அறிவித்துள்ளது. இந்த புதிய மையம், தொலைத்தொடர்பு, தொழில் மற்றும் செமிகண்டக்டர் ஆகிய துறைகளில் சாதனங்களில் செயல்படும் இண்டலிஜன்சை உருவாக்கி, செயல்படுத்த உதவும். இதற்கான முதலீடு சுமார் ரூ.100 கோடி இருக்கும்.
மாடல் நோவா, உடனடியாக பயன்படுத்தக்கூடிய எட்ஜ் ஏஐ மாடல்கள் மற்றும் தரவு தொகுப்புகளின் நூலகமாக விளங்குகிறது. பியூஷன் ஸ்டுடியோ, பயிற்சி, லேபிளிங், மாடல்களை தனிப்பட்ட தன்மை கொண்டதாக மாற்றுவது ஆகியவற்றுக்கான டெஸ்க்டாப் சூழலாகும். இவை இணைந்து, எம்படட் ஏஐ அமைப்புகளை சீராக உருவாக்குவதற்கான செயல்முறையை வழங்குகின்றன.
இந்த அறிமுகம், ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்வது தொடர்பான நிறுவன திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக அமைகிறது. 2026 இந்த விரிவாக்கத்தில் 3 வது கட்டமாக அமைகிறது.
சென்னை விரிவாக்கம் நிறுவனத்தின் மைய சேவையான ஐபி உருவாக்கம், சாதனங்களில் செயல்படும் ஏஐ அமைப்பு பொறியியல் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப பங்குதாரர்களுடன் சூழல் சாத்தியத்தை வலுவாக்குகிறது.
”மாடல்நோவா, எம்பட் யூஆர் சிஸ்டம்ஸ் நிறுவன பயணத்தில் முக்கிய முன்னேற்றமாக அமைகிறது,” என நிறுவனர், மற்றும் சி.இ.ஓ.ராஜேஷ் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“சென்னை மற்றும் தமிழ்நாடு, ஆழ்நுட்ப திறன், தொழில் முதிர்ச்சி மற்றும் கொள்கை நிலைத்தன்மை ஆகிய சாதகங்களை கொண்டுள்ளன. எங்கள் மேடை மற்றும் ஐபி உருவாக்கத்தை இங்கே மையமாக்குவதில் தமிழ்நாட்டை எங்கள் புதுமையாக்க வியூகத்தில் முன்னிறுத்துகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தனது நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம் மேடை விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப தனது பொறியாளர் குழுவை தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. தற்போதைய பொறியாளர் எண்ணிக்கையை 400 பொறியாளர் என்பதில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 550 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
Edited by Induja Raghunathan