+

Gold Rate Chennai: இன்ப அதிர்ச்சி... தங்கம் விலை அதிரடியாக ரூ.2,160 வீழ்ச்சி!

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,160 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது.

மூன்று நாட்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக வீழ்ச்சி கண்டுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,08,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.14,727 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.1,17,816 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2,160 குறைந்தது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (24.7.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.270 குறைந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.294 குறைந்து ரூ.14,433 ஆகவும், சவரன் விலை ரூ.2,352 குறைந்து ரூ.1,15,464 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (24.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.47 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கியுள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,230 (ரூ.270 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,840 (ரூ.2,160 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,433 (ரூ.294 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,464 (ரூ.2,352 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,230 (ரூ.270 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,05,840 (ரூ.2,160 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,433 (ரூ.294 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,464 (ரூ.2,352 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter