
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று வெகுவாக குறைந்ததன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தை மீண்டெழுந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 566 புள்ளிகள் உயர்ந்து 76,608.66 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 153.60 புள்ளிகள் உயர்ந்து 23,923.30 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தல் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, டைடன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. நெஸ்லே இந்தியா, கோடக் மஹிந்திரா பேங்க், ஆக்சிஸ் பேங்க், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 567.94 புள்ளிகள் உயர்ந்து 76,627.71 ஆகவும், நிஃப்டி 166.80 புள்ளிகள் உயர்ந்து 23,934.25 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகப் போக்கு நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தல் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் நிலவி நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
என்டிபிசி
டைடன் கம்பெனி
டாடா மோட்டார்ஸ்
மாருதி சுசுகி
டிசிஎஸ்
இன்போசிஸ்
எடர்னல்
எம் அண்ட் எம்
ஐடிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
சன் பார்மா
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
கோடக் மஹிந்திரா பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
பாரதி ஏர்டெல்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
அதானி போர்ட்ஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.25 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan