+

Gold Rate Chennai: அமைதி காத்த தங்கம் விலை சற்றே குறைவு - வெள்ளி விலை உயர்வு!

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.400 குறைந்துள்ளது. இதனால், சவரன் விலை ரூ.1.13 லட்சத்துக்கு கீழாக சென்றுள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.

கடந்த இரு வர்த்தக தினங்களாக மாற்றமின்றி அமைதி காத்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,13,200 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,436 ஆகவும், சவரன் விலை ரூ.1,23,488 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.400 குறைந்துள்ளது. இதனால், சவரன் விலை ரூ.1.13 லட்சத்துக்கு கீழாக சென்றுள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (11.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.15,382 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,23,056 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (11.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.285 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,85,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.15 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்குமாக உள்ளது. இந்த உறுதியற்ற தன்மையும் ஆபரணத் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,110 (ரூ.50 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.400 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,382 (ரூ.55 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.440 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,110 (ரூ.50 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.400 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,382 (ரூ.55 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.440 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter