மூன்று நாட்களுக்குப் பின் நேற்று அதிரடியாக வீழ்ச்சி கண்ட ஆபரணத் தங்கம் விலை, வாரத்தின் கடைசி நாளான இன்று மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.270 குறைந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.294 குறைந்து ரூ.14,433 ஆகவும், சவரன் விலை ரூ.2,352 குறைந்து ரூ.1,15,464 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,160 குறைந்த நிலையில், இன்று ரூ.580 உயர்ந்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.06 லட்சத்தை கடந்துள்ளது. எனினும், வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (25.7.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.1,06,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.14,509 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.1,16,072 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (25.7.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,40,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.57 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து, மேற்கு ஆசியாவில் போர் மேகம் வலுக்கத் தொடங்கியுள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,300 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,400 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,509 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,072 (ரூ.608 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,300 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,400 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,509 (ரூ.76 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,072 (ரூ.608 உயர்வு)
Edited by Induja Raghunathan