கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கம் தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.150 குறைந்து ரூ.14,500 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.164 குறைந்து ரூ.15,818 ஆகவும், சவரன் விலை ரூ.1,312 குறைந்து ரூ.1,26,544 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.2,250 குறைந்த நிலையில், இன்று ரூ.800 அதிகரித்தது. தற்போது சவரன் விலை ரூ.1.17 லட்சத்துக்கு நெருக்கமாக உள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (29.5.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.14,600 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,16,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.108 உயர்ந்து ரூ.15,927 ஆகவும், சவரன் விலை ரூ.864 உயர்ந்து ரூ.1,27,416 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (29.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.40 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,600 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,800 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,927 (ரூ.100 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,416 (ரூ.864 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,600 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,800 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,927 (ரூ.100 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,416 (ரூ.864 உயர்வு)
Edited by Induja Raghunathan