
ஆபரணத் தங்கம் விலை நேற்று வெகுவாக சரிந்த நிலையில், இன்று மாற்றம் ஏதுமின்றி விற்பனையாவது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 குறைந்து ரூ.14,500 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 குறைந்து ரூ.15,818 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 குறைந்து ரூ.1,26,544 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலை நேற்று ரூ.1,040 குறைந்த நிலையில், இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போது சவரன் விலை ரூ.1.16 லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (2.6.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.14,500 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,16,000 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,818 ஆகவும், சவரன் விலை ரூ.1,26,544 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (2.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,90,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.16 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,500 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,000 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,818 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,26,544 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,500 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,16,000 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,818 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,26,544 (மாற்றமில்லை)
Edited by Induja Raghunathan