
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரன் விலை ரூ.84,000-ஐ தொட்டுள்ளது நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.10,430 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.83,440 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11,378 ஆகவும், சவரன் விலை ரூ.91,924 ஆகவும் உச்சத்தில் விற்பனை ஆனது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ரூ.84,000 என்ற புதிய உச்சம் அடைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. விலை உயர்வுப் போக்கு தொடரலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம், என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (23.9.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.10,500 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.84,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77 உயர்ந்து ரூ.11,455 ஆகவும், சவரன் விலை ரூ.616 உயர்ந்து ரூ.91,640 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (23.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.149 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,49,000 ஆகவும் புதிய உச்சத்தில் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உச்சம் ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அந்த வகையில், தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.66 ஆக வழ்ச்சி கண்டுள்ளது.
அத்துடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் மீண்டும் புதிய உச்சங்களைத் தொடலாம் என்று வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,500 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,000 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,455 (ரூ.77 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.91,640 (ரூ.616 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,500 (ரூ.70 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.84,000 (ரூ.560 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,455 (ரூ.77 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.91,640 (ரூ.616 உயர்வு)
Edited by Induja Raghunathan