இந்தியாவின் இடைநிலை நிறுவனங்கள் ஏஐ நுட்பத்தை தழுவிக்கொள்வதில் உலக அளவில் முன்னிலை பெற்று வந்தாலும், அதிகரிக்கும் சிக்கலான தன்மை மற்றும் செயல்திறன் இன்மை ஆகியவற்றால் கணிசமான விலை கொடுக்கும் நிலை இருப்பதாக Freshworks நடத்திய புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள, குலோபல் காஸ்ட் ஆப் காம்ப்லக்ச்ட்டி ரிப்போர்ட்: தி மிட்மார்கெட் ஏஐ காம்பல்க்சிட்டி டிராப்’ ('Global Cost of Complexity Report: The Mid-Market AI Complexity Trap') இந்திய நிறுவனங்கள் சிக்கலான தன்மையால் ஏற்படும் செலவுகளால் ஏஐ பட்ஜெட்டில் 27 சதவீதத்தை இழப்பதாக தெரிவிக்கிறது. சர்வதேச சராசரி 25 ஆக உள்ளது. பணமாக கணக்கிட்டால், இதனால் ஆண்டுக்கு ஏஐ செலவில் ரூ.33,000 கோடி இழப்பு உண்டாகிறது, எனக்கூறுகிறது.
இந்த சவால்களை மீறி, ஏஐ ஒருங்கிணைப்பில் இந்திய இடைநிலை நிறுவனங்கள் உலக அளவில் முன்னிலை வகிக்கின்றன. 36 சதவீத நிறுவனங்கள் முக்கிய வர்த்தக செயல்பாடுகளில் ஏஐ நுட்பத்தை உள்ளீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் இது 15 சதவீதமாக மட்டுமே உள்ளது.
ஆறு நாடுகளில் உள்ள 9000 இடை நிலை நிறுவனங்கள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய வர்த்தகங்கள் மத்தியில் காணப்படும் வலுவான நம்பிக்கையை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 94 சதவீதத்தினர் அடுத்த ஆண்டு அளவில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் நிலையில், இதே அளவில் நிறுவனங்கள் அடுத்த 12- 24 மாதங்களில் ஏஐ நுட்பம் சார்ந்த முதலீட்டை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.
இருப்பினும், ஏஐ செலவு மீதான பலன் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்திய நிர்வாகிகளில் 74 சதவீதம் பேர் 8 மாதங்களில் பலனை எதிர்பார்க்கின்றனர். ஏஐ நுட்பத்தை செயல்படுத்த 6 முதல் 12 மாதங்கள் ஆவதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
அமைப்பு ஒருங்கிணைப்பு சவால்கள், திறன் பற்றாக்குறை, விரிவான ஒருங்கிணைப்பு அம்சங்கள் ஆகியவை ஏஐ நுட்பத்தை ஏற்பதில் மிகப்பெரிய சவால்களாக அமைகின்றன.
மேலும், இந்திய ஐடி நிர்வாகிகளில் 88 சதவீதம் பேர் ஏஐ சிக்கலான தன்மை பணிச்சுமையை அதிகமாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். 85 சதவீதம் பேர், ஏஐ செயல்பாட்டில் தவறுகள் அல்லது திருத்தம் செய்யும் தன்மை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்திய நிறுவனங்கள் சராசரியாக 4.6 ஏஐ கருவிகள் பயன்படுத்துகின்றன. சர்வதேச சராசரி 4.2 ஆக உள்ளது. இதன் விளைவாக நிறுவனங்கள் , ஏற்கனவே உள்ள அமைப்புகளில் சீராக பொருந்தும் ஏஐ தீர்வுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றன.
மிகவும் பிரத்யேகமான சேவைகளை விட, செயல்முறைகளை கொண்ட ஏஐ தீர்வுகளை 93 சதவீத இந்திய நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றன. வேகமான நிறைவேற்றல் மற்றும் வர்த்தக பலனில் கவனம் செலுத்துவதை இது உணர்த்துகிறது.
Edited by Induja Raghunathan