+

பொழுதுபோக்கு வர்த்தகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக ஏஐ நுட்பத்தை நாடும் ரிலையன்ஸ்!

ஏஐ பொழுதுபோக்கு துறையின் அடுத்த யுகத்தை தீர்மானிக்கும் என்றும், வெறும் வர்த்தக செயல்திறன் கருவியாக மட்டும் அல்லாமல், உள்ளடக்க உருவாக்கம், நுகர்வோர் அனுபவம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மாற்றக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என்றும் இது தொடர்பாக ரிலையன்ஸ் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி வழிநடத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், ஒவ்வொரு இந்தியருக்குமான முதன்மை பொழுதுபோக்கு இடமாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள முற்படும் நிலையில் தன் அது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களின் மையத்தில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) உள்ளார்ந்து இடம்பெற வைப்பதாக நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பொழுதுபோக்கின் அடுத்த யுகத்தை ஏஐ தீர்மானிக்கும், இந்தியாவின் பெரிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மேடையாக, திரைக்கதை முதல் திரை வரை, ஐடியா முதல் அனுபவம் வரை அனைத்தையும் மறு கற்பனை செய்து, இந்த மாற்றத்தை வழிநடத்தும் பொறுப்பு கொண்டுள்ளது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
reliance

ரிலையன்ஸ் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவுகள், ஜியோஸ்டார், ஜியோ ஸ்டூடியோஸ், நெட்வொர்க் 18 உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. பார்வையாளர்களோ மற்றும் வருவாய் நோக்கில் 2026 நிதியாண்டில் சிறந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது.

இந்த பிரிவின் வருவாய், ரூ.34,917 கோடியாக இருமடங்காகி உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இது ரூ.17,762 கோடியாக இருந்தது.

ஏஐ பொழுதுபோக்கு துறையின் அடுத்த யுகத்தை தீர்மானிக்கும் என்றும், வெறும் வர்த்தக செயல்திறன் கருவியாக மட்டும் அல்லாமல், உள்ளடக்க உருவாக்கம், நுகர்வோர் அனுபவம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மாற்றக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என்றும் இது தொடர்பாக ரிலையன்ஸ் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

"ஏஐ வர்த்தக செயல்திறனுக்கான ஆற்றலாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக அடுத்த யுகத்தின் பொழுதுபோக்கை வடிவமைத்து, பார்வையாளர்கள் ஈடுபாட்டை ஆழமாக்குவதற்காக செயல்பாடுகளில் மையமாக அமையும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக்க உருவாக்கம் மற்றும் தயாரிப்பு சார்ந்த் ஏஐ செயல்திறன் பலன்களை அளித்து வருகிறது. மேலும், ஸ்டிரீமிங் மேடைக்குள் வர்த்தகத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு, இந்தியாவின் விரிவடையும் டிஜிட்டல் வர்த்தகத்தில் கூடுதலாக பங்கேற்கும் வாய்ப்பை அளிக்கிறது.

வழக்கமான டிவிகளில் இருந்து இணைக்கப்பட்ட டிவிக்கு மாறுவதை வேகமாக்குவது, தொடர்பு கொள்ளும் வடிவம், குரல் வழி அனுபவம், குறும் வீடியோக்கள் வாயிலாக மொபைல் அனுவத்தை வேறுபடுத்துவது உள்ளிட்ட பல வகை உத்திகளை நிறுவனம் பெரிய திரை பொழுதுபோக்கில் தனது முன்னிலையை தக்க வைத்துக்கொள்ள பின்பற்றுகிறது.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தன்மைக்கு ஏற்ப உள்ளடக்கம் வழங்கும் உத்தியும் வலுவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஊடக வர்த்தகம் மற்றும் டிஸ்னியின் இந்திய வர்த்தகம் இணைந்து உருவாக்கப்பட்ட ஜியோஸ்டார், இந்தியாவில் விளையாட்டின் இல்லமாக தொடரும். உலகில் இருந்து மிகச்சிறந்த கதைகளை கொண்டு வரும்.

"வாடிக்கையாளர்களின் மதிப்புத்தேர்வுகள் உருமாறி வரும் நிலையில் வழக்கமான விளம்பரம் மற்றும் சந்தா தவிர பணமாக்கல் வழிகளை விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பொழுதுபோக்கு துறையின் உள்ளடக்க செலவு அதிகரிப்பு, பார்வையாளர்கள் பிளவுபடல் போன்ற சவால்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது மேடைகள் சாராத பல வடிவ உள்ளடக்க உத்திகளை கோருகிறது.

ஜியோஸ்டார் தனது முன்னிலையை தக்க வைத்துள்ளது. இந்தியில் இது 48 சதவீத சந்தைப்பங்கு கொண்டுள்ளது. 250 நாட்களுக்கு மேலான நேரடி ஒளிபரப்புடன், ஜியோஸ்டார் முன்னணி விளையாட்டு சேவையாக திகழ்கிறது.

இதன் ஓடிடி மேடை இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் பொழுதுபோக்கு மேடையாக 451 மில்லியன் மாதாந்திர தீவிர பயனாளிகளை கொண்டுள்ளதாக வளர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி- பிடிஐ


Edited by Induja Raghunathan

facebook twitter