+

Stock News: தொடரும் ஈரான் பதற்றம் - சென்செக்ஸ் 900+ புள்ளிகள் வீழ்ச்சி!

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் பெரும் தடுமாற்றம் நீடிக்கிறது.

தொடரும் ஈரான் போர் பதற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் சரிவுப் போக்கு தொடர்ந்து வலுத்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 11) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 845.68 புள்ளிகள் சரிந்து 76,482.51 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 237.90 புள்ளிகள் சரிந்து 23,936.85 ஆக இருந்தது.

“ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் பெரும் தடுமாற்றம் நீடிக்கிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் சன் பார்மா, நெஸ்லே இந்தியா, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், கோடக் மஹிந்திரா பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன. ஏனைய பல நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 910.93 புள்ளிகள் சரிந்து 76,417.26 ஆகவும், நிஃப்டி 255.20 புள்ளிகள் சரிந்து 23,920.95 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றச் சூழலே நீடிக்கிறது. ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் பெரும் தடுமாற்றம் நீடிக்கிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

சன் பார்மா

நெஸ்லே இந்தியா

டிசிஎஸ்

ஐசிஐசிஐ பேங்க்

இன்போசிஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

டெக் மஹிந்திரா

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

டாடா ஸ்டீல்

என்டிபிசி

பாரதி ஏர்டெல்

எம் அண்ட் எம்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

டாடா மோட்டார்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

எஸ்பிஐ

இண்டஸ்இண்ட் பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

மாருதி சுசுகி

ஐடிசி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

டைடன் கம்பெனி

எல் அண்ட் டி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.18 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter