
அமெரிக்கா - ஈரான் பேச்சு பின்னடைவு தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 296.19 புள்ளிகள் சரிந்து 73,971.30 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 103.30 புள்ளிகள் சரிந்து 23,272.25 ஆக இருந்தது.
“அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது. இதனால், சர்வதேச பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. நெஸ்லே இந்தியா, எல் அண்ட் டி, எஸ்பிஐ, என்டிபிசி, டைடன் கம்பெனி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் முற்பகல் 10.30 மணியளவில் சென்செக்ஸ் 62.46 புள்ளிகள் சரிந்து 74,204.88 ஆகவும், நிஃப்டி 39.35 புள்ளிகள் சரிந்து 23,343.25 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது. இதனால், சர்வதேச பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
எம் அண்ட் எம்
எடர்னல்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஐடிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
அதானி போர்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
எல் அண்ட் டி
எஸ்பிஐ
என்டிபிசி
டைடன் கம்பெனி
பாரதி ஏர்டெல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
மாருதி சுசுகி
சன் பார்மா
கோடக் மஹிந்திரா பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.11 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan