இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart-இல் முன்னாள் பணியாளர்கள் மீண்டும் சேரும் நடைமுறை அதிகரித்து வருகிறது. நிறுவனத்தின் 'மக்களுக்கே முன்னுரிமை' (People first) பண்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, முன்பு பணியாற்றிய மூத்த நிர்வாகிகள் மீண்டும் இணைந்து வருகின்றனர்.
Flipkart-இல் மீண்டும் சேர்வது ஒரு புதிய தொடக்கம் அல்ல, மாறாக தொழில் வாழ்க்கையில் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. பணியாளர்களுக்கு அதிக பொறுப்பு வழங்கி, நீண்டகால தலைமைத்துவ தாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று நிர்வாகம் தெரிவிக்கிறது.
சமீபத்தில் பாலாஜி ரமணி (Senior Director, Business Finance), ஸ்ரீராம் சௌரிராஜன் (Senior Director, Flipkart Ads), மற்றும் புஜங்கப்பா சுப்பே கவுட (Director, Asset Protection and Security Team) உள்ளிட்டோர் மீண்டும் இணைந்துள்ளனர்.
இது குறித்து Flipkart நிறுவனத்தின் CHRO சீமா நாயர் கூறும்போது:
“முன்னாள் பணியாளர்கள் மீண்டும் சேர்வது, எங்கள் நிறுவன பண்பாட்டின் வலிமையை வெளிப்படுத்துகிறது. இங்கு வளர்ச்சி, உரிமை உணர்வு மற்றும் இந்திய அளவில் சவால்களை தீர்க்கும் வாய்ப்பு உள்ளது.
”எங்கள் நிறுவனத்தில் தொழில் வளர்ச்சி ஒரே நேர்கோட்டுப் பாதையில் இருக்காது. பணியாளர்கள் பல்வேறு வேலைகளில் அனுபவம் பெற்று, புதிய திறன்களை உருவாக்கி, பெரிய பொறுப்புகளை ஏற்கிறார்கள். திறமையை மதிக்கும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டை உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
ஃபிளிப்கார்ட் குழுமம் உள்ளக இடமாற்றங்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பணியாளர்கள் Myntra (Fashion), Cleartrip (Travel), மற்றும் super.money (FinTech, UPI) போன்ற பிரிவுகளுக்கு மாறி பல்வேறு அனுபவங்களை பெற முடிகிறது.
நிறுவனம் தலைவர்களுக்கு பெரிய பொறுப்புகளை வழங்கி, அவர்கள் தொழில்முனைவோர் போல செயல்பட ஊக்குவிக்கிறது. அண்மையில் மீண்டும் இணைந்த துணைத்தலைவர் (Business Finance) விபின் கபூரியா கூறியதாவது:
“ஃபிளிப்கார்ட்டில் மீண்டும் சேர்வது, பெரிய அளவில் சிந்திக்கவும் செயல்படவும் சவாலாக உள்ளது. இங்கு நிதி நிர்வாகம் ஒரு கட்டுப்பாட்டு பணி மட்டும் அல்ல; அது வளர்ச்சி மற்றும் புதுமையை இயக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.”
முன்பு பணியாற்றிய அனுபவத்தில், திறமையான குழு, வேகமான முடிவெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். இப்போது அடுத்த கட்ட வளர்ச்சியில் பங்கெடுக்குவது உற்சாகமாக உள்ளது,” என்றார்.
மூத்தத் துணை தலைவர் நிஷாந்த் வர்மன், கூறியதாவது,
“ஃபிளிப்கார்ட்டில் மீண்டும் சேர்வது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. இங்கு தொழில்முனைவோர் மனப்பாங்கு இன்னும் வலுவாக உள்ளது. புதுமைகளை முயற்சிக்கவும், வேகமாக செயல்படவும், தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. AI துறையில் Flipkart மேற்கொள்ளும் முன்னேற்றம் உலகிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இது எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது,” என்றார்.
மொத்தத்தில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் உரிமை உணர்வு, புதுமை, மற்றும் தொடர்ச்சியான கற்றல் கலாசாரம், இந்தியாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் தலைவர்களை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது.
தகவல் உதவி: பிடிஐ