இந்திய விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் செழிக்கத் துவங்கியிருக்கும் நிலையில், அக்னிகுல் காஸ்மோஸ், லட்சியம் மிக்க வளர்ச்சி இலக்குடன் தனித்து நிற்கிறது. இந்த சென்னை ஸ்டார்ட் அப் 2028 வாக்கில் ஆண்டுக்கு 50 ராக்கெட்களை ஏவ திட்டமிட்டுள்ளது.
இந்த இலட்சியத்திற்கு ஏற்ற ஆற்றலையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஸ்டார்ட் அப் உலகின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட் இஞ்சின் அக்னிலெட்டின் துணை வட்டப்பாதை சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது. இந்த பாதி கிரியோஜெனிக் இஞ்சின், அதி குளிர் திரவ ஆக்சிஜன் மற்றும் அறை வெப்ப கெரோசின் கொண்டு இயங்கியது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள அதன் ஏவுதளத்தில் இருந்து Agnibaan SOrTeD ராக்கெட்டை ஏவியது.
3டி பிரிண்டிங் மூலம் நிறுவனம் ராக்கெட் இஞ்சினை வழக்கமான நேரத்தை விட குறைவான நேரத்தில் உருவாக்க முடியும். சிறிய செயற்கைகோள்களை செலுத்துவதற்கான செலவுய் குறைந்த ஏவுவாகனத்தை உருவாக்கும் நிறுவன இலக்கிற்கு ஏற்ப இது அமைகிறது.
“விண்வெளியில் வாழ்வதற்கு அல்லது பணி செய்வதற்கு விண்வெளிக்கு செல்வது கடினமான பகுதியாக இருக்கக் கூடாது,” என்று யுவர்ஸ்டோரிக்கு இ-மெயில் நேர்காணலில் அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.ஸ்ரீநாத் ரவிசந்திரன் கூறினார்.
துவக்கத்திலிருந்து...
2017ல் நிறுவப்பட்ட அக்னிகுல் காஸ்மோஸ், விண்வெளிக்கான எளிதான அணுகலை வழங்க வேண்டும் எனும் கனவில் இருந்து உருவானது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்த போது, சிறிய செயற்கைகோள்கள் பெரிய ராகெட்களில் பயணிக்க இடம் கிடைக்க கஷ்டப்படுவதை பார்த்தார். சிறிய செயற்கைகோள்களை கொண்டு செல்லக்கூடிய செலவு குறைந்த சிறிய ராக்கெட்களுக்கான இடைவெளியையும் உணர்ந்தார்.
இதற்கான ஏவுவாகன சேவையின் தேவையை உணர்ந்து, ஸ்ரீநாத் ரவிசந்திரன் மற்றும் மொயின் எஸ்.பி.எம், இந்தியாவின் ஏவுவாகன சோதனை அணுகல் வசதியுடன் தொடர்பு கொண்ட பேராசிரியர்கள் மற்றும் வல்லுனர்களை கூட்டு முயற்சிக்காக தேடத்துவங்கினர்.
அப்போது ஐஐடி மெட்ராசில் கம்ப்யூஷன் ரிசர்ச் அண்ட் டவலப்மெண்ட் தேசிய மையத்தின் தலைவராக இருந்த பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தியின் ஆதரவை பெற்றனர். இவரது ஆதரவுடன் மற்றும் இஸ்ரோவில் இருந்துஓய்வு பெற்ற ஆர்.வி.பெருமாள் வழிகாட்டுதலோடு, அக்னிலெட்டை வெற்றிகரமாக உருவாக்கினர். 2021ல் சோதித்துப்பார்க்கப்பட்டு, 2022ல் காப்புரிமையும் கிடைத்தது.
குறைந்த செலவு ஏவுவாகனங்கள்
செலவு குறைந்த உற்பத்தி செயல்முறைக்கான தீர்வாக, அதன் சிறிய அளவு அமைப்புகளை மீறி, அக்னிகுல் 3டி பிரிண்டிங் நுட்பத்தை பயன்படுத்துகிறது. நிறுவனத்தால் ராக்கெட் இஞ்சினை 3 நாட்களுக்குள் உருவாக்க முடிந்துள்ளது. அதன் பாகங்களை 14 ல் இருந்து ஒன்றாக சுருக்கியுள்ளது.
“நம்முடைய பூமியில் எந்த இடத்திற்கும் செல்வதைப்போல விண்வெளிக்கு செல்வதை செலவு குறைந்ததாகவும், எளிமையானதாக ஆக்குவதும் தான் அக்னிகுல் நிறுவனத்திற்கு வெற்றிக்கான வரையறையாக இருக்கிறது,” என்று விண்வெளியை ஜனநாயகமயமாக்கும் நோக்கத்தை ரவிசந்திரன் விளக்குகிறார்.
நிறுவனம் 2022ல் இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்தையும் அமைத்துள்ளது.
“நடமாடும் ஏவுதளத்தை உருவாக்க ஏவுதள பணிகள், மின்னணு செயல்பாடுகள் மற்றும் மென்பொருள் என எல்லாவற்றுக்கும் புதிய வடிவமைப்பு தேவைப்பட்டது,” என்கிறார். ராக்கெட் செல்லும் இடங்களில் எல்லாம் கொண்டு செல்லும் வகையிம் உருவாக்கப்பட்டுள்ள ஏவுதளத்திற்கு ஏற்ப எரிபொருள் முதல் கவுண்ட்டவுன் வரை தேவைப்படும் சிக்கலான அமைப்புகளை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
இந்த ஏவுதளத்தை அமைப்பதற்காக நிறுவனம் எந்த தீய பொருட்களும் இல்லாத போக்குவரத்துக்கு உகந்த அமைப்பு போன்ற வன்பொருள் மற்றும் ஒருங்கிணைப்பு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏவுதளத்தின் ஒவ்வொரு பாகத்தையும், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையில் கவனமாக வடிவமைக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில், தேசிய விண்வெளி உள்கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட தேவையான துல்லியத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது முக்கியம்.
Agnibaan SOrTeD ராக்கெட் செலுத்தப்பட தரை மைப்பு சீராக செயல்பட வேண்டியிருந்தது. இது எளிதாக இருக்கவில்லை.
“ஏவுவது சாத்தியமாவதற்கு முன் இரண்டு முறை கவுண்டவுனை நிறுத்த வேண்டியிருந்தது. தரை அமைப்பில் உண்டாக பல பிரச்சனைகள் இதற்கு காரணமாக அமைந்தன. ஏவுதலில் பங்கேற்ற தரை அமைப்பு, ராக்கெட் அமைப்பின் தரத்திற்கு ஏற்ப அமைந்திருந்தால் இவற்றை தவிர்த்திருக்கலம்,” என்கிறார்.
சரியான பாதை
வரத்த நோக்கில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ராக்கெட்டை செலுத்துவது என்பது அக்னிகுல் நிறுவனத்திற்கு உகந்ததாக அமையும். மேலும், விரைவான, எளிதான விண்வெளி அணுகலை சாத்தியமாக்கும் நிறுவன நோக்கத்திற்கும் ஏற்றதாக அமையும். இருப்பினும், நிறுவனம் வளர்சியோடு, தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பாகத்தையும் துறையின் தரத்திற்கு ஏற்ப தயாரிக்க வேண்டும். நேரம் தவறாமை மற்றும் தரத்தில் கவனம் கொண்ட சப்ளையர்கள் சூழலை உருவாக்குவது இதற்கு அவசியம்.
இந்த சவால்களை மீறி நிறுவனம் நம்பிக்கையோடு உள்ளது.
“இதை செய்ய முடியும் என நம்புகிறோம். ஆனால் இதை கவனமாக கையாள வேண்டும்,” என்கிறார் ஸ்ரீநாத் ரவிசந்திரன்.
அக்னிகுல் வளர்ந்து வரும் நிலையில் , நீடித்த தன்மை முக்கிய அம்சமாக இருக்கிறது. எரிபொருளாக பயன்படுத்தப்படும் கெரோசின் மற்றும் திரவ ஆக்சிஜன் சுற்றுச்சூழல் நட்பானது இல்லை எனும் நிலையில் எரிபொருள் அமைப்பை செயல்திறன் மிக்கதாக்கி, வட்டப்பாதைக்கு செல்வதற்கான அமைப்பில் எதையும் வீணாக்காமல் இருக்க முயற்சிக்கிறது.
மேலும், வட்டப்பாதை நீக்கும் செயல்முறைகளையும் நிறுவனம் பின்பற்றுகிறது. செயற்கைகோள் செலுத்தப்பட்ட பின், வேறு தேவை இல்லை எனில் ராக்கெட் வட்டப்பாதை நீக்க செயல்முறைக்கு உள்ளாக்கப்படுகிறது.
சூழல் தேவை
விண்வெளி சூழல் தொடர்பாக, குறிப்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை என்கிறார் ஸ்ரீநாத் ரவிசந்திரன். லாபமீட்டும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களை ஆதரிக்கும் அரசின் செய்தியும் ஊக்கம் அளிக்கும், என்கிறார். மேலும், தொழில்நுட்ப முதிர்ச்சி அடைந்த ஸ்டார்ட் அப்களுக்கு ஒப்பந்தம் அளிப்பது இந்த துறைக்கு பெரும் ஊக்கமாகம் அமையும், எகிறார்.
இந்த உற்சாகம், சர்வதேச விண்வெளி பொருளாதாரத்தில் அதிகரிக்கும் இந்தியாவின் பங்கையும் உணர்த்துகிறது. வருவாய் நோக்கில் இந்தியா 2023ல் உலக விண்வெளி ஏவுசேவைகளில் 2.9 சதவீத பங்கு மட்டும் கொண்டிருந்தது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் வேகமாக வளரும் பிராந்திய சந்தையாக இருப்பதாகவும், 2030 ல் 1.66 பில்லியன் டாலராகும் என்றும் கிராண்ட் வியூ ரிசர்ச் தெரிவிக்கிறது.
இந்த நடவடிக்கைகள் உலக போக்குகளுக்கு ஏற்ப உள்ளன. உலக விண்வெளி ஏவுதல் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் அண்டுகளில் இது பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. தகவல்தொடர்பு, நேவிகேஷன், பூமி மேற்பார்வை மற்றும் செயற்கைகோள் கூட்டு அமைப்புகளை செலுத்துவதற்கான தேவை அதிகரிப்பதற்கு ஏற்ப இது அமைகிறது.
2024ல் 16.4 பில்லியன் டாலர் என்பதில் இருந்து 2033ல் 46.1 பில்லியன் டாலராக இந்த சந்தை வளரும் என்று ரிசர்ச் அண்ட் மார்க்கெட்ஸ் தெரிவிக்கிறது. வரும் ஆண்டுகளில் இது ஆண்டு அடிப்படையில் 11.28 சதவீத வளர்ச்சியாக இருக்கும்.
ஆங்கிலத்தில்: சியா பகத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan