+

15 மில்லியன் சிறு வணிகங்களுக்கு AI கருவிகளை விரிவுபடுத்தும் அமேசான்!

இந்தியா முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களை 2030க்குள் விரிவுபடுத்துவதற்கான புதிய திட்டங்களை அமேசான் அறிவித்துள்ளது. இதன் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான சிறு நிறுவனங்களுக்கு ஏஐ அடிப்படையிலான கருவிகளை வழங்குவதோடு, அரசு பள்ளிகளில் படிக்கும் 40 இலட்சம் மாணவ

இந்தியா முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களை 2030க்குள் விரிவுபடுத்துவதற்கான புதிய திட்டங்களை அமேசான் அறிவித்துள்ளது.

இதன் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான சிறு நிறுவனங்களுக்கு ஏஐ அடிப்படையிலான கருவிகளை வழங்குவதோடு, அரசு பள்ளிகளில் படிக்கும் 40 லட்சம் மாணவர்களுக்கு ஏஐ அறிவியல் மற்றும் தொழில் விழிப்புணர்வையும் கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியா அரசின் AI மிஷனை ஆதரிக்கும் வகையில் அமேசான் தனது கிளவுட் மற்றும் ஏஐ கட்டமைப்பு முதலீடுகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டு அறிவித்தபடி, 2030க்குள் இந்தியாவில் $12.7 பில்லியன் முதலீடு செய்யும் திட்டத்தில் நிறுவனம் முன்னேறி வருகிறது.

Amazon Pay

சிறு தொழில்கள்களுக்காக செல்லர் சென்ட்ரலில் மேம்பட்ட ஏஐ வசதிகளை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விற்பனையாளரின் கடை தகவல்களை ஆய்வு செய்து, புதிய வாய்ப்புகளை அடையாளம் காணும் மற்றும் வழக்கமான பணிகளை தானியக்கமாக்கும் திறன் கொண்ட Seller Assistant உள்ளது.

மேலும், ஏஐ மூலம் தயாரிப்பு பட்டியல் உருவாக்குதல், விளம்பரங்கள் உருவாக்குதல், வீடியோ தயாரிப்பு போன்ற கருவிகளையும் அறிமுகப்படுத்தி, சிறு விற்பனையாளர்களின் செயல்பாட்டை எளிதாக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

2030க்குள் பள்ளி மாணவர்களுக்கான ஏஐ கற்றல் முயற்சிகளையும் அமேசான் விரிவாக்க உள்ளது. இதில் பாடத்திட்ட ஆதரவு, செயல்முறை திட்டங்கள், ஆசிரியர் பயிற்சி, தொழில் வெளிச்சம் போன்றவை இடம்பெறும். இது தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணங்க அமைந்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் தனது முதலீடுகளை விரிவாக்கும் பணியில் அமேசான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் துரித வணிகப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், தனது செயல்பாடுகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வளங்களை விரிவாக்க $233 மில்லியன் முதலீடு செய்யும் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்துடன், போட்டியாளர் ஃப்ளிப்கார்ட் கூட 2025க்கான பெரிய விரிவாக்கத் திட்டங்களை இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்தது. துரித வணிகம், செயற்கை நுண்ணறிவு, நிதித்தொழில்நுட்பம் (ஃபின்டெக்) துறைகளை வலுப்படுத்த 5,000 புதிய ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தையும், இந்தியாவில் IPOக்கு தயாராகும் நிலையில் தனது சட்டத் தளத்தை இந்தியாவுக்கு மாற்றும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

More News :
facebook twitter