+

Baanhem Ventures-இன் ‘ஸ்டார்ட் அப் சிங்கம்’ சீசன் 2-வின் நிதிச்சுற்றில் இணைந்த முன்னணி முதலீட்டாளர்கள்!

தமிழ்நட்டின் முதல் ஸ்டார்ட் அப் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஸ்டார்ட் அப் சிங்கம் நிகழ்ச்சியை நடத்தி வரும் பான்ஹெம் வென்சர்ஸ், தனது 2 – வது நிதிச்சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழில் முனைவோர்களை ஆலோசகர்களாகவும், முதலீட்டாளர்களாகவும் இணைத்துள்ளது.

தமிழ்நட்டின் முதல் ஸ்டார்ட் அப் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி 'ஸ்டார்ட் அப் சிங்கம்' நிகழ்ச்சியை நடத்தி வரும் 'பான்ஹெம் வென்சர்ஸ்,' தனது 2வது நிதிச்சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழில் முனைவோர்களை ஆலோசகர்களாகவும், முதலீட்டாளர்களாகவும் இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Baanhem Ventures; தமிழகத்தின் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ஸ்டார்ட் அப் சிங்கம் நிகழ்ச்சியை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. ஹேமசந்திரன் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோர் இதன் நிறுவனர்கள்.

இதன் முதல் சீசனில் 35 ஸ்டார்ட் அப்'கள் ரூ.40 கோடிக்கான உறுதிமொழியை பெற்றன. இதில் ரூ.13 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது சீசனில் ஸ்டார்ட் அப் சிங்கம் உயர்ந்த இலக்குடன் இயங்கி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

startup singham

இதற்காக வந்த 2,000க்கும் மேலான விண்ணப்பங்களில் இருந்து 75 ஸ்டார்ட் அப்'கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரிவாக்கப்பட்ட 26 எபிசோட்களில் நிறுவனர்களின் பயணங்கள் இடம்பெறுகின்றன.

‘இந்நிலையில், ஸ்டார்ட் அப் சிங்கத்தின் தாக்கத்தை விரிவாக்கும் நோக்கத்துடன் 2வது நிதிச்சுற்றில், முன்னணி தொழில்முனைவோர்களை, ஆலோசர்களாகவும், முதலீட்டாளர்களாகவும் இணைத்துள்ளர்தாக அறிவித்துள்ளது.

ஆரம்ப முதலீட்டாளரும், தலைமை வழிகாட்டியுமான குமார் வேம்புவுடன் இணைந்து புதிய பங்குதாரர்களாக, டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் தலைவர் கோபால் ஸ்ரீனிவாசன், பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ரூபூதம், கேரட்லேன் நிறுவனர் மிதுன் சக்ரவர்த்தி, டிஎஸ்,எம் குழும நிறுவனங்கள் இயக்குனர் கே.மகாலிங்கம் இப்போபே இணை நிறுவனர் மோகன் கருப்பையா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், ஐநாட் பைனான்சியல் நிறுவனர் ஷ்யாம் சேகர், மேட் ஸ்டிரீட் டென் நிறுவனர் அஸ்வினி அசோகன், எம்2பி பின்டெக் நிறுவனர் மதுசூதனன் ரங்கராஜன் ஆகியோரும் பங்குதாரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொழில் முன்னோடிகள் ஒன்றிணைந்திருப்பது ஸ்டார்ட் அப் சிங்கத்தின் நோக்கத்தை வலுவாக்க உதவும், என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவாக மட்டும் அல்லாமல் ஸ்டார்ட் அப்’களை, தொழில்முனைவை கொண்டாடும் இயக்கமாகவும் விளங்கும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

”இது பான்ஹெம் வென்சர்ஸ் மற்றும் தமிழக ஸ்டார்ட் அப் சூழலுக்கு மாற்றம் தரும் நேரம். இத்தகைய முன்னோடிகளான தலைவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைத்திருப்பது முதலீடு மட்டும் அல்லாமல், வழிகாட்டல், வலைப்பின்னலை வழங்கி ஊக்குவிக்கும்,” என நிறுவனர்கள் ஹேமசந்திரன், பாலசந்தர் தெரிவித்துள்ளனர்.

”தொழில்முனைவு என்பது தமிழ்நாட்டின் பொருளாதார முதுகெலும்பு. பான்ஹெம் வென்சர்ஸ் ஸ்டார்ட் அப் சிங்கம் மூலம் உருவாக்குவது நிச்சயம் பலன் தருகிறது. புதிய பங்குதாரர்களை வரவேற்கிறேன்,” என தலைமை வழிகாட்டி குமார் வேம்பு தெரிவித்துள்ளார்.


Edited by Induja Raghunathan

More News :
facebook twitter