பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர் ரிலையன்ஸ் ரீடெய்லில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார், மாதத்திற்கு சுமார் ரூ.40,000 வரை சம்பாதிக்கவும் செய்தார். ஆனால், அந்த வேலையை விட்டுவிட்டு இப்போது, அவர் ஒரு ஊபர் டிரைவராக இருந்து மாதம் ரூ.56,000 வரை சம்பாதிப்பதாக கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக வருண் அகர்வால் தன் எக்ஸ் தளப் பதிவில் ரிலையன்ஸ் ரீடெய்லில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய தீபேஷின் படத்தைப் பகிர்ந்துள்ளார், அங்கு அவர் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார், மாதத்திற்கு சுமார் ரூ.40,000 சம்பாதித்தார்.
ஓரளவுக்கு நல்ல சம்பளம், நிலையான வேலை இருந்தும் தன்னால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை என்று உள்ளுக்குள் வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்தார். இதனால், கடுமையான வேலைப்பளு தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை தீபேஷ் உணர்ந்தார். எனவே, தனது நிறுவன வேலையை விட்டுவிட்டு முழுநேர ஓட்டுநராக மாறிய துணிச்சலான முடிவை எடுத்தார்.
"இப்போது அவர் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.56,000 சம்பாதிக்கிறார். மேலும் ஒரு மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே வேலை செய்கிறார். இப்போது பணிக்கும் - குடும்பத்தில் செலவழிக்கும் நேரத்திற்குமான சமநிலையை அவரால் பேண முடிகிறது,” என்று அகர்வால் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக அனாவசிய செலவுகள் இன்றி கட்டுக் கோப்பாக நடத்தியதால் தீபேஷ் மற்றொரு காரை வாங்க முடிந்தது, ஏற்கனவே ஒரு ஓட்டுநரை வேலைக்கு அமர்த்தியுள்ளார், தனது சொந்த வாகனக் குழுவை உருவாக்குவதற்கான முதல் படியை எடுத்துள்ளார்.
"சில நேரங்களில் வாழ்க்கையில் முன்னேற சிறந்த வழி ஓட்டுநர் இருக்கையில் அமர்வதே ஆகும்," என்று அகர்வால் தனது பதிவில் தீபேஷின் துணிச்சலான முடிவைப் பாராட்டி விதந்துள்ளார்.
பதிவின் கருத்துகள் பகுதியில், சமூக ஊடக பயனர்கள் தீபேஷின் பயணத்தையும் மனநிலையையும் பாராட்டிக் கொண்டாடி வருகின்றனர்.