+

பார்வையற்றோருக்கு ‘உணர்திறன் ஸ்மார்ட் கண்ணாடிகள்’ - பெங்களூரு மாணவரின் சாதனைக் கண்டுபிடிப்பு!

19 வயதான பெங்களூரு பொறியியல் மாணவர் துஷார் ஷா, பார்வையற்றோரின் வாழ்க்கையை மாற்றும் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அவருடைய கண்டுபிடிப்பு — ‘பெர்சிவியா (Percevia)’ — அதாவது பார்வையற்றோருக்கு தன்னிறைவையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் ஸ்மார்ட் கண்ணாடி. சாம்சங் நிறுவனத்தின் ‘Solve for Tomorrow 2025’ போ

19 வயதான பெங்களூரு பொறியியல் மாணவர் துஷார் ஷா, பார்வையற்றோரின் வாழ்க்கையை மாற்றும் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அவருடைய கண்டுபிடிப்பு — ‘பெர்சிவியா (Percevia)’ — அதாவது பார்வையற்றோருக்கு தன்னிறைவையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் ஸ்மார்ட் கண்ணாடி.

சாம்சங் நிறுவனத்தின் ‘Solve for Tomorrow 2025’ போட்டியில் தேசிய அளவிலான வெற்றியாளராக துஷார் தேர்வாகியுள்ளார்.

தனது சிறுவயதில் பார்வையற்ற அண்டை வீட்டுக்காரரை பார்த்ததுதான் இந்த முயற்சிக்கான தூண்டுதலாக இருந்தது என்கிறார் துஷார்.

“அவருக்கு சாலையை கடப்பது, பொருட்களை அடையாளம் காண்பது, மக்களை அறிதல் — இவை எல்லாமே சவாலாக இருந்தது. அவர்களுக்கு ஒரு தன்னிலை உணர்வை அளிக்கக்கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும், என நான் முடிவு செய்தேன்,” என அவர் கூறினார்.

கணினி பார்வை (Computer Vision) அல்லது ஹார்ட்வேர் வடிவமைப்பில் அனுபவமில்லாதிருந்தும், துஷார் தன்னுடைய ஆர்வத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி பார்வையற்றோருக்கான உதவித் தொழில்நுட்பத்தை உருவாக்க முனைந்தார்.

“சாம்சங் ‘Solve for Tomorrow’ போட்டி எனக்கு வழிகாட்டலும், ஆதாரங்களும், தன்னம்பிக்கையும் வழங்கியது,” என அவர் தெரிவித்தார்.
Smart Glasses for the Blind

'பெர்சிவியா கண்ணாடி', சுற்றுப்புறத்தை ஒலி வழியாக உணர பயனாளர்களுக்கு உதவுகிறது. இதில் ஆடியோ சென்சார்கள், பொருள் அடையாள கேமரா, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இடப்பகுப்பாய்வு (AI-based spatial analysis) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

"இந்தக் கண்ணாடி; பயனாளர்களுக்கு பொருட்கள், மனிதர்கள், தூரம் ஆகியவற்றை கண்டறிந்து, ஒலி அல்லது அதிர்வலை (vibration) மூலம் எச்சரிக்கைகள் வழங்குகிறது. இதன் மூலம் சுற்றுப்புறத்தின்உணர்வுப் படம் உருவாகிறது."

“Gemini 2.0 Flash மாதிரியை திரை விவரிப்பிற்காக பயன்படுத்தினேன். மேலும், பார்வையற்ற தன்னார்வலர்கள் வழங்கிய தரவுகளைப் பயன்படுத்தி முகம் மற்றும் பொருள் அடையாளம் காணும் அம்சங்களை உருவாக்கினேன். அவர்களின் கருத்துகள் எனது வடிவமைப்பை மேலும் மேம்படுத்த உதவின,” என துஷார் கூறினார்.

‘AI for a Safer, Smarter, and Inclusive Bharat’ என்ற தலைப்பில் நடைபெற்ற பிரிவில் பெர்சிவியா வெற்றி பெற்றுள்ளது.

துஷாரின் கனவு இன்னும் பெரியது —

“அணுகல் தொழில்நுட்பத்தில் (Accessibility Tech) நிபுணத்துவம் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கண்ணாடியின் வடிவமைப்பை மேம்படுத்தி, இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் மலிவாகக் கிடைக்கச் செய்வதே என் இலக்கு. இன்னும் நிறையக் கற்க வேண்டும், உண்மையில் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றை உருவாக்கும்வரை என் பயணம் தொடரும்,” என அவர் உறுதியாக கூறினார்.

தமிழில்: முத்துகுமார்

More News :
facebook twitter